பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

93



பின்னர்ச் சில ஈக்கள் எழுந்து, உண்மையில் தாம் பிறப்பினால் ஒப்பானவை யெனினும், தம்மை அரச ஈக்கள் நடாத்து முறை இழிவானதே யெனவும், அது தம்மையடிமைப்படுத்துவ தொன்றெனவும், அதனை விரைவிற் போக்குவது முதற்கடன் எனவும் முடிவு செய்தன. இடையிற் சில ஈக்கள் முன்வந்து தாம் தொடங்கிய இயக்கத்துக்குத் தலைமை தாங்கித் தம்மை உரிய நெறியில் நடத்துவதற்கேற்றவர் அச்சிறுவர் தம் அத்தானே யாவர் எனவும் கூறின. அதுபோது, வேறு சில எழுந்து, முன்னர்க் குறிக்கப்பெற்றவரே தலைவராயின், அவர் தம்மை ஒருங்கே யரசஈக்க ளாக்குதலோ டமையாது தம் கூடுகளையும் செவ்வனம் புரந்து, தமக்கு ஒரு மேதக்க சிறப்புரிமையும் தந்தருள்வாரெனவும் வழிமொழிய, ஒக்கும் ஒக்கும் என்னும் பேரொலி கம்மென அக்குழாத்திடை யெழுந்தது."

ஆ! இதுவும் தகுமா? யாவரும் சிவிகையூரத் தொடங்கின், அதனைக் காவுவார் யார் இந்நிலையில், சிறிது நாள் முதிர்ந்த தொழிலியொன்று, அக்கூட்டத்திடைத் தன் தலையை நீட்டி, “பிறர் நலத்துக்கெனத் தொழில்புரியும் ஈக்களனைத்தும் அரச ஈக்களாக மாறின், நன்று! நன்று!! அவற்றிற்கு ஆம்பணியைப் புரிபவை யாவோ?" என்றது. கல்லா அறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணுவரோ? நண்ணாரன்றே! ஆகலின், அவ்விக்க ளனைத்தும், இதனைக் கேட்டதும் சாலவெகுண்டு, மதியிலி எனவும், தன்னுரிமை யறியாத் தறுதலையெனவும் கூறி, “நாம் அனைவரும் அரசாக்க ளாகுங்கால், இற்றைப் போது அரசு பூண்டிருப்பனவும், அவற்றின் வழித்தோன்றல்களும் தாம் உள்ளளவும் நமக்குப் பணிசெய்து கிடக்கலாமே!” என்றன. என்றலும், அவ் ஈ மறுமுறையும் எழுந்து, "அவற்றிற்குப் பின்னர் அத்தொழிலை மேற்கொள்ளுவோர் யார்" எனக் கேட்ப, கம், கம் என்னும் பேரொலி ஆங்கு மிக்கெழுந்தது. உடனே, அதுவும் தன் நாவையடக்கிக் கொண்டது.

மற்றொரு ஈ எழுந்து, "அன்புடையீர்! எனக்கு முற்பேசிய ஈக்கு நிகழ்ந்த வசை அழகற்றதாகும். அது நமக்குட் பிளவையுண்டுபண்ணினும் பண்ணும். பண்ணுங்கால், நாம்