பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

செம்மொழிப் புதையல்


வாழ்வோம். நம்மைக் கேட்பவர்க்கும், தூய வீரத்தோடும் “யாம் யார்க்கும் குடியல்லோம். யாதும் அஞ்சோம்’ எனவே, நாம் இனிக்கூறுவோம். இதுவே என் சிற்றறிவிற கெட்டிய முடிபாகும். யான் கூறியவற்றில் குற்றங்களிருந்தாற் பொறுத்துக் கொள்ளும்படிக் கேட்டுக்கொண்டு, இம்மாட்டோடு என் சிறிய விரிவுரையை நிறுத்திக்கொள்ளுகிறேன், என்றது. எனவே, வண்டினம் முற்றும் கம்மெனும் இசை செய்து "இது தகும். தகும் தகும்!!" என உடன் பட்டன. பின்னர், அவைகள் ஒருங்கே திரண்டு தாம் இனித்தமித்து வாழ்தற்கேற்ற இடம் நிறுவுதற் பொருட்டு மறுமுறையும் ஒரு கூட்டம் கூடின. இதுபோது இவற்றிற்குத் தலைமைபூண்டு இயல் நெறியிற் செலுத்த வல்லதாய ஒன்றும் வரவில்லை. ஆகவே, அக்கூட்டத்தில் ஒருவகைக்கட்டுப்பாடும் ஒழுங்கும் இலவாயின. என் செய்வது இதுவும் உலகவியற்கையே!!

நிற்க, இடம் நிறுவுதற் பொருட்டு நிகழ்ந்த இக்கூட்டத்திடை, "ஒன்று எழுந்து, காட்சிக்கினியவும் கள் நிறைந்தவுமான மலர்கள் செறிந்துளதும், இதோ நம்முன்னர்த் தோன்றுவது மாய சோலையே நாம் இனிது வாழ்தற்கேற்ற இடமாகும்" என்றது; மற்றொன்று எழுந்து, "அச்சோலையினும், அதற்குச் சிறிது சேய்த்துள்ள வயலே இனிதாகும். சோலைக்கு வருவாரும், வருவனவும் பலவாதலானும், காற்றும் எஞ்ஞான்றும் விரைவுடன் மோதியலைத்தலானும் நமக்கும், நம் கூடுகட்கும் தீங்குவிளையினும் விளையும்." என்றது; வேறொன்று, "நன்கனம் அமைத்துள்ள வீடொன்றின் கூரையே மேற் கூறப்பட்ட விரண்டினும் நன்றாகும். அன்றியும் அது நம்மை மழைக்காலத்தில் இனிது "காக்கவல்லதாகும்” என்று சொல்லிற்று. நான்காவதாக, வேறொன்று, "பழுமரமொன்றின் கொழுவிய கிளையே நல்லது" என, மற்றொன்று, மலை முழைஞ்சினையும், வேறொன்று கற்பாறையையும் குறித்தன. இங்ஙனம், ஒவ்வொன்றும் தன்தன் கருத்திற் புலனாய இடங்களைக் கூறிச் சென்றனவே யொழிய, உறுதியான இடம் ஒன்றேனும் குறிக்கப்பெறவில்லை. அன்றியும், ஒன்று கூறியது மற்றொன்றின் கருத்துக் கொவ்வா தொழிந்தது.

இவ்வண்ணம் ஈக்கள் ஒன்றுக் கொன்று முரணிய கருத்துக் கொண்டு, கலாய்த்து நிற்பக் காலமுஞ்சென்றது; பிற்பகல்