பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

97


எய்திற்று. அதுபோது, அத்தேனீ இவ்வியக்கத்துக்குக் காரணமாயிருந்த அத்தேனீ - வேறோரீயினை நோக்கி, ‘என்னே உங்கள் அறிவின்மை யிருந்தவாறு! உங்களைக் காணும்தோறும் என் உளத்தில் வெகுளி யெழுகின்றதேயன்றி விருப்புண்டாகின்றதில்லை. எத்தகைய அறிவுள்ள சிற்றுயிரும் இவ்வண்ணம் வீணே காலத்தைக் கழிக்காது. அந்தோ! இதனை அறிவின்மை யென்பதா? அறியாமை யென்பதா?" என, அது சாலவும் சினந்து, என்னை கூறினை? ஏ, அறிவிலி! உனக்கு ஈயரசு பெறவேண்டும் எனும் எண்ணம் உளது போலும்! அறிந்தேன். அறிந்தேன். இன்றேல், நீ என்னை இங்ஙனம் கேட்டல்கூடுமா? நிற்க, யாங்கள் காலத்தை வீணேகழிப்பதால் உனக்கு உண்டாகும் இழவென்னை? யாங்கள் எதையேனும் செய்கிறோம். அது பற்றி நீ வெகுளுதல் எற்றுக்கு? நீ உன் காரியத்தைப் பார்த்துக் கொள்க.” என்றறைந்தது. இத்தகைய மாற்றத்தை எதிர் நோக்காது பெற்ற அத்தேனீ, மனமுளைந்து, தனக்குண்டான மானத்தையும், இழிவையும், உன்னியுன்னிப் பெரிதும் வருந்தத் தொடங்கிற்று. அப்போது, தான் அக்கிளர்ச்சிக்குக் காரணமாயிருந்தமையையும், அதனால் தனக்கே துன்ப மெய்தினமையையும் அது எத்துணையோ அடக்கிக்கொள்ள முயன்றது. மற்று, அம்முயற்சியாற் பயனொன்று முண்டாயிற்றன்று. ஆகவே, அது மற்ற ஈக்களின் முக்த்தைக் காணுதற்கே வெட்கி, சிவ்வென் றெழுந்து பூம்புதரொன்றை யடைந்து, பண்டேபோல் தேன்றேடத் தொடங்கிற்று. புதர்க்குட் புகுந்து, ஆண்டு அழகு ஒளிர மலர்ந்து நின்ற மலரொன்றின் உட்புகுந்து, தான் இதுகாறும் கண்டறியாத சுவையும், மிகுதியுமுடைய தேனுண்டு களித்தது. ஆ" இது போதன்றோ அது களிவண்டென்னும் பெயர்க்கு இலக்காயிற்று! அது இதுபோது கொண்ட களிப்புக்கு ஒர் எல்லையுமின்று! அது தன் வாணாளி லோர்நாளிலேனும் இதுபோன்ற களிப்பினை யடைந்த தின்றெனின் வேறு கூறுவதென்னை வேட்கை முற்றுங் காறும் நறவமுண்டு, வேண்டுவனவும் உடன்கொண்டு தன் கூடு நோக்கி, என்றும் அறியாத ஒருவகைப்பற்று, அன்று அதன் மனத்தை ஈர்ப்ப, அது விரைந்தெழுந்தது. எழுதலும், அதன் முன்னர், பண்டு தான் கேட்டறிந்தனவற்றை முதன் முதலுரைப்பக் கேட்ட முதிர்ந்தவண்டு போதந்தது. கண்டதும், அதற்குப் பெரு நாண்