பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உன்ரும் புறமும் 3.

இனமாக சமுதாய வீதியில் நடமாட வேண்டிய இழி நிலை ஏற்பட்டுவிடும் எனவே, தமிழுக்குக் கிடைக்கும் வெற்றி தமிழனுக்குக் கிடைக்கும் வெற்றி, தமிழ் இனத்துக்குக் கிடைக்கும் வெற்றி இவ்வெற்றியும் நம்மோடு முடியும் வெற்றியல்ல; நம் சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்லும் உண்மையான புகழ்மிகு சொத்து

ஆங்கிலேயர்களின் ஆட்சியதிகார அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெற்றபோதிலும் அவர்களால் நம்மிடையே அழுத்தமாகப் பதியச் செய்த ஆங்கில மொழியின் ஆதிக்கத்திலிருந்து விடு படாததோடு, நாமே வலியச் சென்று ஆங்கில அடிமை விலங்கை எடுத்து கைகளில் இறுக்கமாக மாட்டிக் கொண்டு, ஆங்கில மொழி அடிமைகளாக நம்மைக் காட்டிக் கொள்வதில் அலாதிப் பெருமையும் பூரிப்பும் அடைகிறோம் என்றால் நம் சிந்தனையில், உணர்வில் எங்கோ பெரும் தவறு ஏற்பட்டு, அது வளர்ந்து, சுய சிந்தனையாற்றலை இழந்தவர்களாக நம்மை ஆக்கிக் கொண்டுள்ளது என்பது தானே உண்மை

எல்லாச் செல்வங்களும் என் வீட்டில் நிறைந்திருக்க, அதனை அறியாதவனாக அடுத்த வீட்டிலும் எதிர் வீட்டிலும் ஏதுமற்ற ஏதிலிபோல் கையேந்தி நிற்கும் இழி நிலைக்கு எது காரணம்?

அறிவமுதை அள்ளித் தந்து, சிந்தனைத் திறத்தை வளர்த்து வளப்படுத்த தாய் மொழியை தெரிந்துவனாக மட்டும் இருந்து கொண்டு, அதன் அளப்பரிய ஆற்றலை அறியாதவனாக இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை! நம் தமிழ் மொழியின் ஆற்றலை அறிந்து தெளிவதுடன், அத்தகுதிப் பாட்டை முழுவீச்சில் வெளிப்படுத்த சரியான