பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 89

என்றால் ஹிந்து சமயம், இந்தியர்கள் என்றால் ஹிந்துக்கள், இந்தியாவின் ஒரே புனித மொழி சம்ஸ்கிருதம் என்ற நிலையை உலக அரங்கில் நிலை நிறுத்துவதற்கு இடையூறாக 'தமிழ் செம்மொழி என்ற நிலை அமைந்துவிடுமோ என்ற எண்ணம் ஆட்சியாளர்க்கு குறிப்பாக செம்மொழி அங்கீகாரம் வழங்கக்கூடிய மனித வள மற்றும் கல்வித் துறை அமைச்சருக்கு இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது இப்போது இருக்கும் நிலையே நீடித்தால்தான் எதிர்காலத்தில், இந்தியா என்றால் ஹிந்து, ஹிந்து மொழி எனில் சம்ஸ்கிருதம் என்ற நிலை நிலைபெறும் என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதாகத் தெரிகிறது

இயங்கும் மொழியும் இயங்கா மொழியும் ஒன்றா?

தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற்றபின்னர் செம்மொழியான சம்ஸ்கிருதத்தோடு ஒப்பீட்டாய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்கவியலா ஒன்றாகும் அப்போது சம்ஸ்கிருதத்தின் குறைகளும் செம்மொழி தமிழின் நிறைகளும் பட்டியலிட வேண்டிய காட்டயாச் சூழ்நிலை ஏற்படும் ஏனெனில், செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள் பதினொன்றில் ஏழு தகுதிப்பாடுகள் மட்டுமே சம்ஸ்கிருதத்துக்கு உண்டு தமிழுக்கு பதினொரு தகுதிப்பாடுகளும் பொருந்துவனவாகும் மற்றும், சம்ஸ்கிருதம் முழுக்க முழுக்க வேத மொழி என்ற அடிப்படையில் ஹிந்து சமயத்தைச் சார்ந்த மொழியாயமைந்துள்ளது தமிழ் சமயச் சார்பற்ற சமுதாய மொழியாக அமைந்துள்ளது இதெல்லாவற்றையும்விட தமிழ் இயங்கும் மொழியாக அமைந்துள்ளது. ஆனால், சம்ஸ்கிருதமோ இயங்கா மொழி இக்காரணங்களால் தமிழின் முன்