பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 செம்மொழி - உள்ளும் புறமும்

சம்ஸ்கிருதத்தின் பெருமை சிதைய நேருமோ என்ற அச்சமும் அவர்களிடம் உருவாகி நிலைபெற்றிருப்பது ஒரு காரணமோ என்னவோ

மேனாட்டு ஆய்வாளர் கவனம் அதிகம் ஈர்க்கப்படுமே என்ற அச்சமா?

தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற்றால், பல வெளிநாட்டு மொழியியலாளர்களின் பார்வை தமிழின் மீது திருப்பும் இது இயற்கையும் கூட ஆரிய இனம் சார்ந்த மொழி என்பதற்காகத்தான் ஜெர்மானிய மொழியியல் அறிஞர் மார்க்ஸ் முல்லரின் முழு ஆய்வுப் பார்வை சம்ஸ்கிருதத்தின் மீது படிந்தது கெதே என்ற ஜெர்மானிய இலக்கியவாணர் காளிதாசனின் 'சாகுந்தலம்' போன்ற படைப்புக ளெல்லாம் ஜெர்மன் மொழி வாயிலாக உலகெங்கும் சென்றது 'ஜெர்மன் இன்டாலஜி எனும் அரிய நூலை எழுதிய ஆசிரியர், மார்க்ஸ்முல்லருக்கு அவரது இறுதிக் காலத்தில் தான் தமிழ் இலக்கியம் அறிமுகமாகியது என்றும் தமிழ் இலக்கியப் படைப்புகளைக கண்டு அவர் பெரிதும் வியந்து போற்றினார் என்றும் சம்ஸ்கிருத இலக்கியங்கள் அறிமுகமான காலத்தில் தமிழ் மொழியும் இலக்கியங்களும் அவருக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருந்தால் நிச்சயம் மாக்ஸ்முல்லரின் முழுக் கவனம் தமிழின் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் திரும்பியிருக்குமே தவிர சம்ஸ்கிருதத்தின்பால் இந்த அளவு முனைப்பு காட்டியிருக்காது' எனக் குறிப்பிட்டிருப்பது மிகச் சரியான கணிப்பு ஆகும் இதே நிலையும் போக்கும் இன்றும் சம்ஸ்கிருத மொழிமீது காட்டிவரும் மேனாட்டு மொழி ஆய்வாளர்கட்கு ஏற்பட வாய்ப்புண்டு இதை