பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும 101

யெல்லாம் சம்ஸ்கிருத ஆர்வலர்களான இன்றைய ஆட்சியாளர்கட்கு இயைபுடையதாக இல்லை என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது

மற்றைய மொழிகள் உரிமை கோறுமா?

தமிழைச் செம்மொழியாக்கினால் மற்றுள்ள இந்திய தேசிய மொழிகளும் இத்தகைய கோரிக்கை வைக்கலாம் அத்தனை இந்திய மொழிகளையும் செம்மொழி ஆக்குவது எங்ங்னம்? என்றொரு வினா உரியவர்களால் அடிக்கடி எழுப்பப்படுகிறது. இது முழுக்க முழுக்க உணமைக்குப் புறம்பான, உப்பு சப்பற்ற அசச உணர்வாகும் ஒரு மொழி செம்மொழி யாக இருக்க வேண்டுமெனில், குறைந்தது இரண் டாயிரம் ஆண்டுகட்கு முன் அம்மொழி வழக்கில் இருந்திருக்க வேண்டும் இலக்கியப் படைப்பு களையும் இலக்கணக் கட்டுக்கோப்பையும் பெற்று, எல்லா மட்டத்திலும் செல்வாக்குப் பெற்று அரசோச்சியிருக்க வேண்டும் இந்தத் தகுதிப்பாடு இந்திய மொழிகளில் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இல்லை என்பது வெள்ளிடைமலை இன்னும் சொல்லப் போனால் ஆயிரம் ஆண்டு பழமையுடைய மொழிகளையே வாய்விட்டு எண்ணிவிடலாம் எனவே, தமிழொத்த பழமையும் மொழி, இலக்கிய, இலக்கணச் செழுமையுமுடைய பழம்பெரும் இந்திய மொழி வேறு எதுவும் இல்லாத நிலையில், தமிழைச் செம்மொழியாக்குவதற்கு குறுக்கே எந்த இந்திய மொழியும் வர வாய்ப்பு இல்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை