பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 செம்மொழி - உள்ளும் புறமும்

மருட்சி வேண்டாம்

தமிழ் செம்மொழியாவதால் சம்ஸ்கிருதத்தின் பெருமையும் சிறப்பும் குன்றும், குறையும் என்ப தெல்லாம் வெறும் மருட்சியேயன்றி, வேறில்லை இன்னும் சொல்லப்போனால் தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெறுவதன் மூலம், இந்தியாவின் ஒட்டு மொத்தப் பெருமைக்கும் சிறப்புக்கும் அது உறு துணையாயமையும் என்பதுதான் உண்மை சுருங்கச் சொன்னால் பழமைச் சிறப்புமிக்க சம்ஸ்கிருத மொழியும் தமிழும் இந்தியாவின் இரு பெரும்

கண்களாகும்

முழு இந்தியாவைக் காண உதவும் இரு கண்கள்

ஐரோப்பாவை முழுமையாக அறிந்துணர வேண்டுமெனில், லத்தீன், கிரேக்க மொழிகளின் மூலமே பழைமைச் சிறப்போடு தெளிவாக அறிந்துணர முடியும் அதற்குரிய இரு கண்களாக இவ்விரண்டு மொழிகளும் அமைந்துள்ளன என்பது மொழியியலாளர் முடிவு அவ்வாறே இந்தியாவை முழுமையாக அறிந்துணர வேண்டுமெனில் அதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருகண்களாக அமைவனதான் சம்ஸ்கிருதமும் தமிழும் வட இந்திய மொழிகளில் சம்ஸ்கிருதச் செல்வாக்கும் தென்னக மொழிகளில் தமிழின் செல்வாக்கும் மிகுந்திருப் பதால் ஒட்டு மொத்த இந்தியாவை மொழி, கலை, இலக்கிய, பண்பாடு மற்றும் எண்ணப்போக்கு சிந்தனை வளம் போன்ற தன்மைகளை முழுமையாக அறிய இவ்விரு மொழிகளின் உறுதுளை கட்டாயம் தேவை என்பதைச் சொல்லத் தேவையில்லை

எனவே, ஒட்டுமொத்த இந்தியாவின் இதயத் துடிப்பைத் துல்லியமாய் உணர்த்தவல்ல இதயத்