பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்தமிழ்ச் செல்வர் மணவை முஸ்தபா

அறிவியல் தமிழ்ப் பணியை வாழ்நாள்

பணியாக மேற்கொண்டுள்ள மணவை முஸ்தபா. சென்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டங்கள் பெற்றவர். தென்மொழிகள் புத்தக நிறுவன நிர்வாகப் பதிப்பாசிரியர் சர்வதேசத் திங்களிதழ் யுனெஸ்கோ கூரியர் ஆசிரியராகப் பணியாற்றி 30 உலக மொழி ஆசிரியர்களில் பணி மூப்பு ஆசிரியர் எனும் த கு தி க் காக யுனெஸ் கோ வால் சிறப்பிக்கப்பட்டவர். தற்போது பிரிட்டானிக்கா கலைக் களிஞ்சியத் தமிழ்ப் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது 40-க்கு மேற்பட்ட நூல்களில் 7 கலைச்சொற்களஞ்சிய அகராதிகளாகும். இவை இந்திய மொழிகளில் முதலாவதாகும் பல இலட்சம் கலைச் சொற்களை உருவாக்கிய இவரை உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகள் விருதளித்துப் பாராட்டிப் பரிசளித்துள்ளன. தமிழ்நாடு அரசின் ஐந்து விருதுகள் உட்பட 35-க்கு மேற்பட்ட விருதுகளைப் பெற்ற ஒரே தமிழறிஞர் எனும் சிறப்புப் பெற்றவர்.

எட்டு ஆண்டுகள் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர். சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சிப் பேரவை இணைச் செயலர் தொலைக்காட்சி வானொலி ஆலோசனைக் குழு உறுப்பினர். ஞானபீடத் தேர்வுக்குழு உறப்பினர். முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழ் வளர்ச்சி மேல்மட்டக் குழு உறுப்பினர். சுதந்திரப் பொன்விழாக் குழு உறுப்பினர். அண்ணா பல்கலைக்கழக தமிழ்வளர்ச்சிக் குழு உறுப்பினர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக கலைச் சொல்லாக்கக் குழு உறுப்பினர். முன்னாள் கெளரவ மாகாண மாஜிஸ்திரேட் இதழ்கள். தொலைக்காட்சி வானொலிகளில் நூறுக்கு மேற்பட்ட படைப்புகளை வெளிப்படுத்தியவர். பன்னிரெண்டு மொழி பெயர்ப்பு உத்திகளை வகுத்தவர். இவரது அறிவியல் நூல்கள் தமிழ்நாடு அரசு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகளின் பரிசுகளைப் பெற்றுள்ளன.

மலையாள-தமிழ்ப் பணிக்காக கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை பொன்விழாவில் சிறப்பிக்கப்பட்டவர். இவரது வாழ்க்கையும் சாதனைகளும் மத்திய அரசால் 7 மணி 20 நிமிடம் பதிவு செய்யப்பட்டு ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மணவையார் அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட இவர் மூன்று முறை உலகை வலம் வந்துள்ளார்.