பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தமிழ் செம்மொழி ஆக வேண்டும் என்ற கோரிக்கை இதுகாறும் ஒரு வேண்டுகோளாக தமிழ் ஆர்வலர்களாலும் தமிழியல்துறை வல்லுநர் களாலும் அரசுக்கு விடுக்கப்பட்டு வந்தது ஆனால் இன்றோ அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக அது வடிவெடுத்துள்ளது இன்னும் சொல்லப்போனால் 'தமிழ் செம்மொழி ஆக வேண்டும் என்பதைப் பேசாத தமிழ்நாட்டுத் தலைவர்கள் இல்லை, அரசியல் கட்சிகள் இல்லை தங்கள் தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய இடத்தை இதற்கு வழங்கியதிலிருந்தே அவர்கள் இக்கோரிக்கைக்கு அளித்துவரும் முக்கியத்துவத்தை நாம் நன்கு உணர்ந்து கொள்ளமுடியும் எனவே இக்கோரிக்கை இப்போது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளதில் வியப்பேதும் இல்லை

நூற்றாண்டுப் பிரச்சினை

பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்த போதிலும் செம்மொழி பற்றிய தெளிவு எத்தனை பேரிடம் உள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய கேள்வியாகும் செம்மொழி என்றால் என்ன? ஏன் தமிழ் 'செம்மொழி ஆக்கப்பட வேண்டும்? இக்கோரிக்கை ஏன் திடீரென எழுப்பப்படுகிறது? அல்லது இதற்கு முன் எப்போதாவது இக்கோரிக்கை எழுப்பப்பட்டது உண்டா? அப்படியானால் எப்போது? எதற்காக எழுப்பப்பட்டது? இன்றையச்