பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 செம்மொழி உள்ளும் புறமும்

அன்று பரிதிமாற் கலைஞர், பூரணலிங்கம் பிள்ளை, பாண்டித்துரைத் தேவர் போன்ற ஒருசிலர் விழித்துக் கொண்டு செயல்பட்டு, அம்முயற்சியை தடுத்து நிறுத்தி, இந்திய மொழிகளைக் காத்தனர் இன்றோ பலதரப்பு மக்களும் விழிப்பாயிருப்பதனால் மொழி ஆதிக்கத்தை நிலை நாட்ட மறைமுகமான முயற்சிகள் எல்லா மட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன என்பதை விழிப்புணர்வு உடையோர் நன்கு அறிந்தே உள்ளனர் தமிழ்நாட்டை பொறுத்த வரை அத்தகைய விழிப்புணர்வின் வெளிப்பாடுதான் அனைத்துத் தகுதிப்பாடுகளும் சிறப்புமிகு தனித் தன்மைகளும் ஒருங்கு கொண்ட தமிழை செம்மொழி யாக மத்திய அரசு அங்கீகரித்து அறிவிக்க வேண்டும் என்ற உரிமைக் கோரிக்கை, இதுவெறும் கோரிக்கை மட்டுமன்று, நீதியின் அடிப்படையில் நிலைநிறுத்தப் படும் உரிமை வேட்கையுமாகும் இன்னும் சொல்லப் போனால் ஒரு ஒருவகையில் தவிர்க்கவியலா உரிமை முழககமுமாகும்

சிறப்பு அம்சங்கள்

தமிழ் 'செம்மொழி என எண்பிப்பதற்கான மொழியியற் கோட்பாடுகளையன்னியில், சில சிறப்பமசங்கள் இந்திய மொழிகளிலேயே தமிழுக்கு மட்டுமே உள்ளன என்பதை இந்த நேரத்தில் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்

பன்னாட்டு மொழி - தமிழ்

இந்திய மொழிகளிலேயே பன்னாட்டு மொழி என்ற தகுதிப்பாடு தமிழுக்கு மட்டுமே கிடைத்துள்ள

மிகபபெரும் பெருமையாகும் இந்தி உட்பட மற்றைய மொழிகளெல்லாம் இந்திய மொழிகள் எனும்