பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 செம்மொழி - உனளும் புறமும்

உள்ள தமிழர்களால் பேசப்படும் சர்வதேச மொழியாகவும் தமிழ் அமைந்துள்ளது இன்னும் சொல்லப்போனால், உலகெங்கும் பரவலாகப் பேசப்படும் ஒரே ஆசிய மொழி தமிழ் ஆகும் உலகெங்கும் பரவி வாழும் ஈழத்தமிழர்கள் தமிழைப் பேசி வருவதோடு அதன் வளர்ச்சிக்கும் உழைத்து வருகிறார்கள் எனலாம் தமிழில் படித்து பட்டம் பெறுவதை கனடா அரசு அங்கீகரித்துள்ளது என்பது தமிழ் சர்வதேச மொழி என்பதற்குக் கிடைத்த ஒருவகை அங்கீகாரமாகும்

செம்மொழி - தகுதிப்பாடுகள்

ஒருமொழி சிறந்த மொழியாகவும் உயர்ந்த மொழியாகவும் இருக்கலாம் அதிகமான எண்ணிக்கையினரால் பேசவும் எழுதவும் பயன் படுத்தப்பட்டு வரலாம் அது ஒரு சிறப்புமிகு மொழியாகக் கருதப்படுமேயன்றி செம்மொழியாகக் கருதப்படாது

செம்மொழியாக உலகினரால் அங்கீகரிக்கப் பட வேண்டுமெனில் அதற்கு மொழியியல் அடிப் படையில் பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டுமென மொழியியலாளர்கள் வரையறை செய்துள்ளனர் இத்தகைய பதினொரு தகுதிப் பாடுகளும் உள்ள மொழிகள் மட்டுமே செம் மொழிகளாக அங்கீகரிக்கத்தகக தகுதிப்பாடுடைய மொழிகளாகும் உலகிலுள்ள செம்மொழிகளில் தமிழ் ஒன்று மட்டுமே இத்தகுதிப்பாடுகள் அனைத்தும் கொண்ட ஒரே மொழி என்பது நமக்கே தெரியாத மாபெரும் மொழியியல் உண்மையாகும்