பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 25


பேசுவதோடு, தமிழை வளர்த்து வளப் படுத்த இரண்டு தமிழ்ச் சங்கங்களையும் அப்பகுதியில் உருவாக்கி தமிழை வளர்த்தார்கள் என்பது 'இறையனார் களவியலுரை போன்ற நூற்கள் தரும் தகவலாகும் இப்பகுதியில் தமிழ் பேசும் நாற்பத் தொன்பது நாடுகள் இருந்ததாகவும், இங்கு இருவேறு காலகட்டங்களில் முதல் தமிழ்ச் சங்கமும் இரண்டாம் (இடைச்சங்கம்) தமிழ்ச் சங்கமும் இருந்ததாகவும் கருதப்படுகிறது கடற் பிளவு ஏற்பட்டபோது, நிலப் பகுதிகள் பல்வேறு திசைகளை நோக்கி நகர, மூலத் தமிழ்ப் பகுதி குறுகலாயிற்று அத்துடன் மலைகளும் ஆறுகளும், சமநிலப் பெருவெளிகளும் காலப் போக்கில் திடீர் திடீரென கடலுள் மூழ்க தமிழர்கள் எஞ்சிய இந்திய நிலப்பகுதியில் மட்டும் வாழ்வாராயினர் இந்நிகழ்வைப் பதிவு செய்ய விழைந்த சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள்,


"பஃருளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள"


என வருந்திப் பாடுவாராயினார்


எஞ்சிய இந்தியப் பகுதியின் தென்பகுதி மதுரையில் 'கடைச் சங்கம்' என அழைக்கப்படும் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை அமைத்துத் தமிழை வளர்க்கலாயினர் தமிழர்.


இப்பகுதியில் தமிழ் வழங்கிவந்ததற்கு ஆதாரமாக ஆசிய, ஆஃப்ரிக்க மொழிகள் பலவற்றில் தமிழ்ச் சொற்கள் விரவிக் கிடப்பதைச் சான்றாகக் கூறுகின்றனர் இதுவரை நிலப்பகுதி மொழியின் தொன்மையைப் பார்த்தோம் இனி, தமிழ் இலக்கண இலக்கியத் தொன்மையைக் காண்போம்