பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 செம்மொழி உள்ளும் புறமும்

தொன்மை இலக்கணம் தொல்காப்பியம்

தமிழ் இலக்கண நூல்களில் மிகத் தொன்மையான இலக்கண நூலாக அமைந்திருப்பது தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பிய இலக்கண நூலாகும் இஃது சுமார் 2,600 ஆண்டுகட்கு முன்பு இயற்றப்பட்டி ருக்கலாம் என இலக்கண வரலாற்றாசிரியர்கள் கணித்துக் கூறியுள்ளனர் இவ்வளவு பழமையுடை இலக்கண நூல் வேறு எந்த இந்திய மொழிகளில் சம்ஸ்கிருதம் உட்பட இருப்பதாகத் தெரியவில்லை உலக மொழிகளிலாவது இருக்கிறதா என்பது ஆய்வுக்குரிய ஒன்றாகும்

உலக மொழி இலக்கண நூல்களில் காணக் கிடைக்காத ஒரு தனிப்பெரும் சிறப்பு தொல்காப்பிய இலக்கண நூலில் காணக்கிடக்கிறது அதுதான் மொழிக்கு இலக்கணம் வகுத்ததோடமையாது, மனித வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்த நூலாக விளங்குவது அதன் தனிச் சிறப்பாகும்

தமிழ் இலக்கியத் தொன்மை

ஒரு மொழியில் இலக்கண நூல் இருக்கிற தென்றால் அது தோன்றுவதற்கு ஆதாரமான இலக்கியங்கள் அம்மொழியில் பெருமளவு உருவாகி யிருக்க வேண்டும் எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல இலக்கியப் படைப்புகளின் அடிப்படை யிலேயே இலக்கண விதிமுறைகள் உருவாக்கவியலும் என்பது உலகியல் முறை இது, வாழ்க்கையிலிருந்து எழும் இலக்கியமே மனிதனுக்கு வாழக் கற்றுத் தரும் ஆசானாக அமைவதுபோல், இலக்கியங்களிலிருந்து வகுக்கப்படும் இலக்கண விதிகளே இலக்கியப் படைப்புகள் சிறந்த முறையில் உருவாக்கப்பட வழி