பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 செம்மொழி உள்ளும் புறமும்

சமுதாய அமைப்பு முறையிலும் தனித்துவமுடைய தாகும்

வியக்கவைக்கும் ஐந்தினைப் பகுப்பு

இந்த உலகை ஐந்து வகைப்பட்டனவாகப் பகுத்து இலக்கியம் படைத்த பெருமை தமிழ்ப் புலவர்கட்கு உண்டு உலகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுத்து, அவற்றின் தன்மைகளை வாழ்வியலோடு இணைத்து இலக்கியம் படைத்த பெருமை தமிழுக்குண்டு இப்பகுப்பு முறை வேறு எந்த மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை தமிழ்நாட்டில் பாலை வனம் ஏதும் இல்லையென்றாலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலப்பகுதிகள் தன்னிலை திரிந்து பாழடைந்து போனால், அப் பகுதியை பாலையாகக் கருதி இலக்கியம் படைக்கும் போக்கு தமிழுக்கேயுரிய தனித்தன்மையாகும்

கலை, பண்பாடு, நாகரிக வெளிப்பாடு

தமிழ் இலக்கியங்களின் குறிப்பிடத்தக்க மற்று மொரு தனித்தன்மை, அவை சமுதாயத்தின் எந்தப் பிரிவினரையும் முழுமையும் சார்ந்ததாகப் படைக்கப் படவில்லை சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரைச் சுட்டிக்காட்டும் வகையில் இலக்கியப் படைப்பு அமையினும், அப்பிரிவினரிடையே பேதமேற் படுத்தும் வகையிலோ வேற்றுமை உணர்வுகளை உண்டாக்கும் முறையிலோ எந்தவொரு அம்சமும் இடம்பெறா வகையில் உருவாக்கப்பட்டவைகளாகும் இன்னும் சொல்லப்போனால், சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரைத் தொட்டுக் காட்டினாலும்