பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 செம்மொழி - உள்ளும் புறமும்

செய்தியையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் செம்மொழியாக ஏற்கப்பட்டுள்ள சம்ஸ்கிருத இலக்கியங்கள் துறவிகளையும் புரோகிதர்களையும் சார்ந்ததாக உருவாக்கப்பட்டிருக்கும்போது, சங்கத் தமிழ் இலக்கியங்கள் வீரர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளன

உள்ளது உள்ளபடி வாழ்க்கை விளக்கம்

சங்ககால இலக்கியங்களில் நாம் காணும் மற்றுமொரு தனித்தன்மை, இவற்றில் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி விவரிக்கப்பட்டிருப்பதாகும் பிற்கால சமய இலக்கியங்களில் விவரிப்பது போல் இல்லாமல் கூடுதல் குறைப்பு இல்லாமல் வாழ்க்கையை உள்ளபடி விவரிக்கும் போக்கையே அவற்றில் கான முடியும் அதுமட்டுமில்லாமல், வாழ்க்கையை அறிவியல் சிந்தனைப் போக்கிலும் சமுதாய வாழ்வை மிகைப்படுத்தாமலும் கூறுவதன் வாயிலாக அன்றைய சமுதாய மக்களின் வாழ்வின் நோக்கையும் போக்கையும் தெளிவாகக் காட்டும் காலக் கண்ணாடி யாக சங்கப் படைப்புகள் இன்றும் திகழ்கின்றன

அறிவியல் அடிப்படையில் இலககியம்

சங்க கால இலக்கியத்தின் மற்றொரு தனித் தன்மை அறிவியல் செய்திகளை உள்ளடக்கிய அருந் தமிழ்ப் பாக்களை இயற்றியிருப்பதுதான் அறிவியல் என்பது ஏதோ அண்மைக் காலத்தில், ஆங்கிலேயர் களின் ஆட்சியின் விளைவாக இங்கு இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புதிய துறை என்ற எண்ணமே எல்லோரிடமும் மேலோங்கியுள்ளது ஆனால், உணமை நிலை என்னவென்றால் சங்க காலத்திலும்