பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 33

சங்க காலத்திற்கு முன்னதாகவும் வாழ்ந்த தமிழர்கள் அறிவியல் பூர்வமாக வாழ்ந்தவர்கள் அப்போது, அவர்கள் மீது சமயத் தாக்கம் ஏதும் படிந்திருக்க வில்லை சமயத் தாக்கம் ஏதுமில்லாத அன்றைய தமிழன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தான் அறிவியல் பூர்வமான சிந்தனைகளோடு தன்

வாழ்வியல் போக்குகளை அமைத்துக் கொண்டான்

வானவியலிலும் கடலியலிலும் கப்பலியலிலும் சிறந்து விளங்கிய தமிழன், உலகெங்கும் கப்பல் செலுத்தி வாணிகம் செய்தான் வடக்கே வடகடல் தாண்டி சீனா வரை சென்றான் மேற்கே மத்தியதரைக் கடல் தாண்டி மேற்கு ஐரோப்பா வரை சென்று வாணிகம் செய்தான் கிழக்கே கம்போடியா வரையிலும் தெற்கே நியூஸிலாந்து வரையிலும் சென்றான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன பெல்ஜியத்தில் கிடைத்துள்ள தமிழ் எண்களைக் கொண்ட கடிகாரமும் பெய்ஜிங்கில் புதை பொருளாய்வின்போது கிடைத்த சீன, தமிழ் எழுத்துக்கொண்ட கல்வெட்டுகளும் நியூசிலாந்து அருகில் கடலுள் மூழ்கிக் கிடந்த கப்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட கப்பல் மணியும் மற்றும் கம்போடியாவிலுள்ள ஆங்கோர்வாட் கோயிற்றொகுதியின் அருகிலுள்ள சோளே தோய் (சோழர் காலனி) பாண்டியே தோய்' (பாண்டியர் காலனி) என்றழைக்கப்படும் இடங்கள் எல்லாமே தமிழர்களுடைய வெளிநாட்டுத் தொடர்பு களை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் நினைவுச் சின்னங்களாகும்

இவ்வாறு அறிவியல் அறிவோடு உலகளாவிய முறையில் வாழ்ந்த தமிழர்கள், அன்று பெற்றிருந்த