பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 செம்மொழி உள்ளும் புறமும்

அறிவியல் அறிவு நம்மை வியக்கவைக்கிறது இன்று அறிவியல் உலகம் எதையெல்லாம் கண்டறிந்துள்ள தாகப் பெருமைப்படுகிறதோ, அந்த அறிவியல் உண்மைகளையெல்லாம் சங்ககாலத் தமிழன் நன்கு அறிந்து, உணர்ந்து தெளிந்திருந்தான் என்பதை அன்றைய சங்கப் பாக்களே இன்றும் விவரித்துக் கூறி நம்மை வியப்பிலாழ்த்துகின்றன

இந்த நிலவுலகம் எவ்வாறு தோன்றியது என்பதை அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் இன்று தெளிவாக அறிந்துள்ளோம் ஆனால், இந்தக் கண்டுபிடிப்பின் அறிவியல் உண்மைகளை முதன் முதலாகப் பதினாறாம் நூற்றாண்டில் கோப்பர் நிக்கஸ், கலீலியோ போன்ற வானவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் கூறியபோது, உலகம் ஏற்கத் தயங்கியது அறிவியல் உண்மைகளை கூறியதற்காக கலீலியோ போன்றவர்கள் கடுமையாகக் கண்டிக்கப் பட்டனர் சிறையில் அடைத்துக் கொடுமையாகத் தணடிக்கப்பட்டனர். ஆனால் அதே அறிவியல் உண்மைகளை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழன் தெளிவாகக் கண்டறிந்து, சங்கப் பாடல்களில் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளான் சான்றாக, இந்த உலகம் எவ்வாறு உருவாகி நிலை பெற்றது என்பதை விவரிக்க முனைந்த சங்கப் புலவன்,

"செந்தீச் சுடரிய ஊழியும் - பனியொடு தண்பெயல் தழிஇய ஊழியும்" எனச் சுருக்கமாகக் கூறுகிறான்

'சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்

பிழம்பான இவ்வுலகம் நெருப்புக் கோளமாக ஒரு ஊழிக்காலம் வானில் சுழன்று கொனடேயிருந்தது