பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 செம்மொழி உள்ளும் புறமும்

தீ முரணிய நீரும்

என்றாங்கு ஐம்பூதத்தியற்கை"

என்ற பாடல் வரிகள் தெளிவாக எடுத்துக் கூறி விளக்குகின்றன

இதில், இன்னொரு சிறப்பம்சமும் அடங்கி யுள்ளது ஐம்பூதங்களாகிய ஐம்பெரும் தனிமங்களால் (Elements) இந்நிலவுலகம் அமைந்துள்ளது என்ப தோடு, இத்தனிமங்கள் எதிலிருந்து எது உருவாயின என்பதற்கான படிநிலைகளையும் இப்பாடல் தெளிவாக்குகிறது

நிலமும், நிலத்திலிருந்து வானும், வானிலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும் உருவாயின என்பதையும் இப்பாடல் உணர்த்துகிறது

இத்தகைய அறிவியல்நுட்பச் செய்திகளை தமிழன் பாடல் வரிகளாகப் பதிவு செய்த இதே காலகட்டத்தில் வேறு எந்த மொழி இலக்கியத்தி லாவது இத்தகைய அறிவியல்நுட்பச் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என கேள்வி எழுப்பினால் அதற்கு இல்லை என்றே பதில் கூற வேண்டிய நிலையே எங்கும் உள்ளது

இவ்வாறு, அறிவியல்நுட்பச் செய்திகளை பன்னெடுங் காலத்துக்கு முன்பே பதிவு செய்திருப்பது தமிழின் தனித்துவத் தன்மையாகும்

காலப்போக்குக்கும் தேவைக்குமேற்ப தமிழ்

வளர்ச்சி

காலத்தின் போககுக்கும தேவைககுமேற்ப ஒரு

மொழி நெகிழ்நது கொடுத்து தன்னைத்