பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 37

தகவமைத்துக் கொண்டு வளர வேண்டும் இது ஒரு சிறந்த மொழிக்குண்டான அடிப்படைப் பண்பாகும். அப்போதுதான் அம்மொழி என்றென்றைக்குமாக வாழவும் வளமாக வளரவும் முடியும் என்பது மொழியியலார் முடிபு

இத்தகு போக்கினைக் கைக்கொள்ளாத எந்த மொழியும் தேக்க நிலைக்கு ஆளாகி, காலப்போக்கில் இயங்கும் வல்லமையை இழந்தனவாக இறப்பைத் துணைக் கொண்டு, மொழி வரலாற்றில் மட்டும் இடம்பிடித்து வாழும் நிலையைப் பெறுகின்றன இவ்வுண்மைகளையே வழக்கிழந்துபோன லத்தீன் போன்ற புகழ்மிகு மொழிகள் உலகுக்கு இன்று உணர்த்திக் கொண்டிருக்கும் வரலாற்று உண்மைகள்

ஆனால், தமிழ் மொழி - இலக்கியத்தைப் பொறுத்தவரை காலப்போக்கையும் தேவையையும் கருத்திற்கொண்டு, மாற்ற திருத்தங்களை நெகிழ்வுத் திறனோடு ஏற்று, காலத்திற்கேற்ற மொழியாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளத் தவறியதே இல்லை "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில, கால வகையினானே' என்பதற்கொப்ப பழைய இலக்கிய வடிவங்களை விட்டுவிட்டுப் புதிய இலக்கிய வடிவங்களை ஏற்றும், தன்னைக் காலத்திற் கேற்ப தகவமைத்து வளமாக வளர்ந்து வந்ததை தமிழ் மொழி - இலக்கிய, இலக்கண வரலாறு இன்றும் பறைசாற்றிக் கொண்டுள்ளது

அகம் - புறம், இகம் - பரம் ஆகியது

அவ்வகையில் அகம் - புறம் எனப் பிரித்து, சமுதாயத் தமிழாக மலர்ந்து மணம் வீசிக்