பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 41

பிளவுபட்டுக் கிடந்த சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஒன்றிணைத்ததன் மூலம் தமிழ் இனத்தையே ஒன்றிணைத்து, பொதுமைப்பண்பை ஊக்குவிக்கும் வகையில் படைக்கப்பட்ட முதல் தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரமாகும்

4, s5@aļģeosvgolo (NEUTRALITY)

சங்க இலக்கியப் படைப்புகள் சமயச் சார்பற்றவை களாகும் சங்க காலத்தில் வட நாட்டுச் சமயங்கள் தமிழ்நாட்டில் கால் பதிக்க முனைந்தன. அதற்கு முந்தைய காலகட்டம் சமயத் தாக்கம் என்பது அறவே இல்லாத காலமாகும் அக்கால கட்டத்தில் வாழ்ந்த தமிழன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்த காலமாகும் அதன் பின்னர் இருந்த சங்ககால இலக்கியங்கள் பலவும் சமுதாய நோக்கில் எழுந்தவை யாகும் மனித குலத்தை நடுவு நிலைமையோடு அலசும் இலக்கியப் படைப்புகளாகும். எந்த ஒரு தனிப்பட்ட பிரிவையோ வகுப்பையோ அல்லது சமயச் சார்போடுக்கூடிய படைப்புகளாக உருவாக்கவில்லை இந்தச் சமுதாயப் பேருண்மையை கீழ்க்கண்ட சங்கப் பாடல் திட்பநுட்பமாக உணர்த்துகிறது

"யாயும் யாயும் யாராகியரோ o

எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

என்பது சங்கப் பாடல் வரிகள்

களவுமுறையில் காதலித்து கற்பியல் முறையில் திருமணம் செய்துகொண்ட காதலன்-காதலியாகிய கணவனும் மனைவியும் திருமணத்திற்குப் பிறகு