பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 செம்மொழி உள்ளும் புறமும்

தனிமையில் தங்கள் கடந்த கால காதல் வாழ்வை நினைவு கூர்ந்த நிலையில் ஒருவரைப் பார்த்து இன்னொருவர் வியப்புற்ற நிலையில்,

'உங்களைப் பெற்ற தாய் யார் என்று எனக்குத் தெரியாது, என்னைப் பெற்ற தாய் யார் என்று உங்களுக்குத் தெரியாது; உங்கள் தந்தையும் என் தந்தையும் எந்த வகையில் உறவுடையோரோ? நமக்குத் தெரியாது வானிலிருந்து செம்மண் நிலத்தில் விழும் மழைநீர் செந்நிறத்தைப் பெறுவதுபோல், அன்புள்ள நம் நெஞ்சங்கள் ஒன்றோடொன்று கலந்து ஒன்றிவிட்டன" என வியந்து பேசுவது போல் அமைந்துள்ள இப்பாடல்மூலம் இருமனம் ஒத்து ஒரு மனமாகும் காதலர்களின் மனநிலையை மட்டும் இப்பாடல் சித்தரிக்கவில்லை சாதி, சமயம், இன, வகுப்புப் பிரிவு ஏதுமில்லாது, மனிதன் - தமிழன்தமிழச்சி என்ற உறவுகளுக்கு மேல் மற்ற வேறுபாடு கற்பிக்கும் எந்த உறவுக்கும் இடமில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறத் தயங்கவில்லை இப்பாடலை இயற்றிய புலவன் கூட தன் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை அப்பெயர் மூலம் இப்புலவன் இன்ன குலம், இன்ன கோத்திரம் அல்லது பிரிவைச் சேர்ந்தவன் என யாரும் கருதி விடக்கூடாது என்பதற்காக இவர் பெயரை 'செம்புலப் பெயல்நீரார் என்று அவர் சுட்டிய உவமையின் பெயராலேயே அவர் அழைக்கப்படுகிறார் இதிலிருந்து சங்க கால இலக்கியங்கள் எந்தவொரு செய்தியையும் நடுவு நிலைமையில் விவாதிப்பதையே தன் உயிர் மூச்சுக் கொள்கையாகக் கொண்டிருந்தன என்பது மிகத் தெளிவாகத் தெரியவருகிறது