பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 43

எச்சார்புமின்றி உலகியலை நடுவுநிலைமையில் அலசி ஆராயும் போக்கே சங்க காலத்தில் அரசோச்சி வந்த உணர்வு என்பதை இன்றும் உணர்த்திக் கொண்டிருக்கும் சங்ககாலப் படைப்பு திருக் குறளாகும் அதனால்தான் அனைத்து வேறுபாட் டுணர்வுக்கு அப்பாற்பட்ட நிலையில் திருக்குறளை இன்றைக்கு உலகின் எழுத்தோவியம் என்ற அளவில் அணுகுகின்றனர் ஆல்பர்ட் ஸ்வைட்சர், ஏரியல் போன்ற மேனாட்டறிஞர்கள் திருக்குறளை உலக மக்களின் ஒரே மறை நூல்' என்று கூறி வியக்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம், அனைத்து வேறுபாட்டுணர்வுகட்கும் அப்பாற்பட்ட நிலையில் மனிதகுலத்தை மட்டும் மனதிற் கொண்டு நடு நிலைமையில் நெறி வகுத்துச் சொல்வதுதான்

5. 3rtu isoloff gairaoud (PARENTALKINGSHIP)

ஒரு மொழி செம்மொழியாக இருக்க வேண்டு மென்றால் அது பல மொழிகளின் உருவாக்கத்துக்குத் தாயாக இருந்திருக்க வேண்டும் என்பது மற்றொரு அடிப்படை அம்சமாகும்

வடபுலத்தின் மலைவாழ் மக்களால் பேசப்படும் பிராகுயி மொழி முதல் இந்தியாவின் தென்கோடி கேரளம் வரை சுமார் 42 மொழிகளுக்கு இன்றும் தாயாகத் திகழும் சிறப்புமிகு தகுதி தமிழுக்கு உண்டு என்பது கால்டுவெல் போன்ற மொழியியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவாகும்