பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 45

விடும் வகையில் இவை அவனை நோக்கி கோபுரம் எழுப்ப முடிந்தது என்று கருதிய கடவுள், அவர்கள் அனைவரும் பேசி வந்த ஒரே மொழியை மறக்கவும் ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு மொழியைப் பேவும் செய்தார் ஒத்த உணர்வோடு ஒன்றிணைந்து ஒரே மொழி பேசி ஒற்றுமையாகப் பேபல் கோபுரம் எழுப்பிக் கொண்டிருந்த மக்கள் திடீரென வெவ்வேறு புதிய மொழிகளைப் பேசலாயினர் ஒருவர் பேசியமொழி மற்றவர்க்குப் புரியவில்லை இதனால் குழப்பம் ஏற்பட்டது சண்டை, சச்சரவு எங்கும் தலை தூக்கியது அதுவரை ஒன்றுபட்டு ஒழுங்காக பேபல் கோபுரம் எழுப்பும் பணிக்குத் திடீரென குந்தகம் விளைந்தது ஒருவர் பேசிய மொழி மற்றவர்க்குப் புரியாததால் ஒருவருக்கொருவர் சச்சரவிட்டு சண்டையிட்டுக் கொண்டனர். இதனால், ஒற்றுமை குலைய ஒவ்வொரு மொழி பேசியவரும் தனித்தனியே பிரிந்து சென்று வாழமுற்பட்டனர் இவ்வாறு அவர்கள் பேசிய மொழிகளின் மொத்த எண்ணிக்கை எழுபத்தியிரண்டு எனக் கூறப்படுகிறது

இந்த மொழிகள் அனைத்துககும் மூலமாக தம் மக்களால் முதலில் பேசப்பட்ட அந்த ஒரே மொழியின் சொற்களும் ஒலிகளும் ஏதோ ஒரு வகையில் இந்த எழுபத்திரண்டு மொழிகளிலும விரவியிருந்தன. அந்த மூலமொழி குமரிக் கண்டத்தில் வாழ்ந்த ஆதி பிதா ஆதாம்வழி வந்த வம்சா வழியினராக இருக்கலாம் அவர்கள் பேசிய ஒரே மூல மொழி தமிழாக இருக்கலாம் அதனால் தான் ஆசிய, ஆஃப்ரிக்க மொழிகளில் தமிழ்ச் சொற்களும் ஒலிகளும் மிகுதியும் கலந்துள்ளன என மொழியில் ஆய்வாளர்கள் அனுமானிக்கிறார்கள்