பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 செம்மொழி உள்ளும் புறமும்

எப்படியோ, உலக மொழிகளில் மிகத் தொன்மை மொழியாகத் தமிழ் இருந்தது என்பது பண்டை இலக்கிய செய்திகளாலும் மொழியியல் ஆய்வாளர்களின் அனுமானங்களாலும் உறுதி செய்யப்பட்டு வருகிறது

கடற்பிளவால் சிதைந்த குமரிக்கண்டம்

குமரிக்கண்டம் கடற்பிளவால் (Rift) பல்வேறு பகுதிகளாக பிளவுபட்டு ஒதுங்கிச் சென்றபோது அந்தந்த நிலப்பகுதிகளில் வாழ நேர்ந்த மக்கள் அவ்வக் காலச் சூழலுக்கேற்ப தங்கள் மொழியில் ஒலியையும் ஒலி உணர்த்தும் பொருளையும் அமைத்துக்கொள்ள, அவரவர் போக்கிற்கேற்ப மொழியும் வளர்ந்து வளம் பெற்றது என்பது மொழி வரலாறு உணர்த்தும் உண்மையாகும்

மனித குலத்துககு ஆதிபிதா ஆதாம் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை உலக மொழிகளுக்கெல்லாம் ஆதித தாயாக, ஆதாம் பேசிய தமிழ் மொழி இருந்திருக்க வேண்டும் என்பதுமாகும்

ஹரப்பா, மொகஞ்சோதரோவில் தமிழ்

இந்தியாவைப பொறுத்தவரை ஆஃப்கானிஸ் தான் முதல் குமரி எல்லை வரையுள்ள மொழிகளில் அங்குமிங்குமாக தமிழ்செல்வாக்கு இருந்தே வருகிறது இன்னும் சொல்லபபோனால், ஹரப்பா - மொகஞ்சோதரோ பகுதிகளில் வழங்கிவந்த பண்டைய மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என மொழியியல் ஆய்வாளர்களும, புதைபொருள் ஆய்வாளர்களும் கண்டறிந்து கூறியுள்ளனர்