பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 செம்மொழி - உள்ளும் புறமும்

ஐரோப்பிய மொழிகளில் தமிழ் வேர்ச் சொற்கள் பல இடம்பெற்றுள்ளதை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், ஞானகிரி நாடார், சாத்துர் சேகரன் போன்ற பலர் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளனர்

சில ஆண்டுகட்கு முன்பு, ஆஃப் ரி க் கா வில் உள்ள செனகல் நாட்டுக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஃபெடரிக் செங்கார் என்பவர் - இவர் மாபெரும் புரட்சிக் கவிஞரும் மொழியியலாரும்கூட - இந்தியாவோடு செய்து கொண்ட ஒப்பந்த மொன்றில் கையெழுததிட புதுதில்லி வந்தார் வந்தவர், தமிழ் நாட்டிற்கும் வந்தார் ஆளுநர் மாளிகையில் தங்யிருந்த அவர் தமிழறிஞர்களைப் பார்த்து பேச விரும்புவதாக விருப்பம் தெரிவிக்கவே, சில தமிழறிஞர்கள் ஆளுநரால் அழைக்கப்பட்டனர் பன்மொழிப் புலவர் அப்பாதுரையார், வாகீச கலாநிதி கி வா ஜகந்நாதன் போன்றவர்களோடு 'யுனெஸ்கோ கூரியர் சர்வதேச இதழின் ஆசிரியர் என்ற முறையில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன் அவர் எங்களைப் பார்த்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை தன் இனத்தோடும் தன் தாய்மொழியோடும் மிக நெருக்கமான தமிழ் மொழி, தமிழின மூதாதையரின் வழித்தோன்றல்களை நேரில் கண்டு அளவளாவவே தமிழ்நாடு வந்திருப்ப தாகக் கூறியபோது அவர் கண்கள் உணர்ச்சி மிகுதியால் பனித்துவிடடதைப் பார்கக முடிந்தது தங்கள் செனகல் மொழிக்கும் தமிழுக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதை ஒரு மொழியியலாளர் என்ற முறையில் நன்கு அறிந்திருப்பதாகவும் கூறினார் செனகல் மொழி மட்டுமல்லாது மற்றைய ஆஃப்ரிக்க மொழிகளும்கூட தமிழ்மொழியோடு நெருக்கம் கொண்டிருப்பதை காணும்போது தமிழ் அல்லது