பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 செம்மொழி - உள்ளும் புறமும்

அப்பாற்பட்ட மனநிலையோடு சமயப் பொறை யோடு நல்லிணக்க உணர்வு பொங்க வாழ்ந்த சான்றாண்மைகளையும் சிறப்புற விளக்கி, வேற்றுமை களுள் ஒற்றுமை கண்டு வாழும் சமுதாய, சமய நல்லிணக்க உணர்வூட்டும் உன்னத வழிகாட்டி நூலாக சிலப்பதிகாரம் விளங்குவதைக் காண முடிகிறது. இதற்கான சூழல்களை திறம்பட உருவாக்கிக் கதையை நகர்த்துவதன் மூலம் படிக்கும் வாசகனையும் தம் மன உணர்வையே பெறத் தூண்டி வழிகாட்டுகிறார் இளங்கோவடிகள் இதை முழுமையாகப் பிரதிபவிக்கும் காட்சியொன்றைப் பார்ப்போம்

பூம்புகாரிலிருந்து பிழைப்புத் தேடி மதுரை நோக்கிச் செல்லும் கோவலன்-கண்ணகி தம்பதியரோடு மதுரை நோக்கிச் செல்லும் சமண சமயத் துறவியரான கவுந்தியடிகளும் இணைந்து கொள்ள, மூவருமாக மதுரையம்பதி நோக்கிப் பயணிக்கின்றனர் வழியில் மாடலன் எனும் மறையவனைச் சந்திக்க நேர்கின்றது அவனிடம் மதுரைக்கு வழிகேட்க, வைதீக வைணவ சமயத்தைச் சார்ந்த அவ்வேதியன் தான் திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதரையும் திருப்பதியிலுள்ள திருமாலையும் வணங்கி இறை அருள்பெற மதுரையிலிருந்து செல்வதாகவும் கூறியதோடு, அப்பதிகளின் பெருமையையும் அப்பதிவாழ் தெய்வங்களின் சிறப்புகளையும் விலாவாரியாக விவரித்துக்கூறி பெரு மகிழ்வடைகிறான் அதே சமயம், மதுரை செல்லும் இம்மூவரும் அங்குள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய தீர்த்தங்களில் மூழ்கி எழுந்தால் முப்பிறவி