பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 55

நிலை அறிந்துணர முடியும் எனக் கூறி, தன் வைணவ சமயத்தின் அருமைபெருமைகளையெல்லாம் அளந்து கட்டுகிறான் அவன் கூறிய அனைத்துச் செய்தி களையும் கோவலன்-கண்ணகியோடு பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சமண சமயத் துறவியான கவுந்தியடிகள், தன் சமண சமயப் பெருமைகளை விரிவாக விளக்கிக் கூறி வைணவ மாடல மறையவ னோடு வாதிட்டிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்ய முனையாததோடு, அவன் இதயம் ஏற்குமாறு எளிமையாக,

"வாய்மையின் வழாஅது மன்னுயிர் ஒப்புநர்க்கு யாவதுமுண்டோ ஏய்தா அரும்பொருள் காமுறும் தெய்வம் கண்டடி பணிய நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குதும்"

எனக் கூறுகிறார்

வாய்மை வழியில் நின்று ஒருவன் ஒழுகுவானே யாகில் அவன் வாழ்வில் பெறத்தக்க பேறுகள் அனைத்தையும் பெறமுடியும் எனும் பேருண்மையைப் புரிந்து கொண்டால் போதும் அவன் பெறத்தக்க பேறுகள் அனைத்தையும் பெற முடியும் நீங்கள் விரும்பும் தெய்வங்களை வணங்கி அவர்களின் பேரருளைப் பெற நீங்கள் தொடர்ந்து பயணியுங்கள் நாங்களும் நீண்ட பயணத்தைத் தொடர்ந்து மதுரை நோக்கிச் செல்கிறோம்" என்று கூறிப் பயணத்தைத் தொடர்கிறார்

இதன் மூலம் சமயப் பிரச்சாரம் நடைபெற்ற

பாங்கையும் சமய வேற்றுமை பாராட்டாது சமய உணர்வுகட்கு அப்பால் சமய நல்லிணக்க