பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 செம்மொழி - உள்ளும் புறமும்

மொழிகளுக்குப் பாதகமாகவும் அமைய நேரிடும் ஏனெனில், சில மொழிகளில் சொற்பெருக்கம் குறைவாக இருக்கும் புது மொழிச் சொற்கள் அக் குறையை நிறைவு செய்யும் வகையில் வந்தமைவதால் அந்த மொழிக்கு அது பயனாயமைகிறது அதே சமயம் நன்கு வளர்ந்து சொற்பெருக்கத்தோடு வளமாக இயங்கி வரும் மொழியில் புதிய மொழிச் சொற்கள் வந்து கலக்கும்போது, அம்மொழியிலுள்ள பல பழைய, பொருள் பொதிந்த சொற்களின் பயன்பாடு குறைய அச்சொற்கள் இறப்பைத் துணைக் கொண்டு வழக்கிழந்து செத்து மறைகின்றன இதனால் இருக்கும் சொல் வளத்தை இழந்து நிற்க நேர்கிறது இவ்வாறு ஏற்படும் மொழிக் கலப்புகள் இயல்பாக ஏற்படுவதும் உண்டு சில சமயம் வேண்டுமென்றே திட்டமிட்டு சமயப் போர்வை, ஆட்சிப் போர்வை போன்றவைகளின் துணையோடு வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் சொற்களைக் கலந்து கலப்பட மொழியாக்கி, தனித்தியங்க இயலாவண்ணம் ஆக்கப்படுவதும் உண்டு உலக மொழிகளின் வரலாற்றில் இத்தகைய நிகழ்வுகள் ஏராளம் உண்டு

அத்தகு நிலையிலும் கூட, பிற மொழிச் சொற்களின் ஒட்டும் உறவும் இல்லாது, தனக்கென்று உள்ள மூலச் சொற்களைக் கொண்டே தனித்துத் திறம்பட இயங்கவல்ல அம்சம் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகளில் ஒன்றாகும் இவ்வகையில் வேறு எந்த மொழிச் சொல்லின் உதவி இம்மியும் தேவைப்படா நிலையில் எத்தகைய உணர்வையும் கருத்தையும் பிசிறில்லாமல் வெளிப்படுத்தும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்பதை டாக்டர் எமினோ,