பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

'செம்மொழி பற்றிப் பேசும்போதெல்லாம் நண்பர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி தமிழை செம்மொழி என்று அழைப்பது சரியா? அல்லது 'செவ்வியல் மொழி என்று அழைப்பது சரியா? என்பதுதான்

இவ்வாறு ஆளுக்கொரு சொல் என்று இல்லாமல், ஒருமைத் தன்மையோடு எல்லோரும் ஒரேவிதமாகச சொல்வது தானே தமிழ் நலனுக்கு உகந்ததாக இருக்க முடியும் சரி, மேற்கணட இரு சொற்களில் எது சரியான சொல்?

இரண்டு சொற்களுமே ஒவ்வொரு வகையில் சரியானதே என்று கூறி நான் நழுவ விரும்பவில்லை எது சரியான சொல் என்பதை தமிழ் மொழி வரலாற்றுப் போக்கில் இலக்கியம், இலக்கணக் குறிப்புகள் மூலம் முடிவு காண்பதே சரியானதாகவும் முறையானதாகவும் இருக்க முடியும்

முதலில் ஒரு செய்தியைத் தெளிவாக்க விரும்புகிறேன் சங்க இலக்கியம், மற்றும் தொல் காப்பிய இலக்கணம் முதலாக, மொழி ஞாயிறு பாவாணர்வரை அனைவரும் தமிழை செம்மொழி என்றே அழைத்துவர, இன்று ஒருசிலர் செம்மொழிச் சொல்லுக்கு மாறாக 'செவ்வியல் மொழி' என அழைக்கத் தலைப்பட்டு குழப்பமுண்டாக்கி