பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 செம்மொழி உள்ளும் புறமும்

களிலிருந்து நீக்கினால் அவற்றால் தனித்தியங்க இயலாது அவ்வாறே பழைய தமிழும் சம்ஸ்கிருதமும் இணைய உருவானவைகளே தென்னக மொழிகளான கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகள் இவற்றி லிருந்து தமிழ்ச் சொற்களையோ அன்றி சம்ஸ்கிருதச் சொற்களையோ நீக்கினால் அவற்றால் அறவே இயங்க முடியாது

ஆனால், தமிழைப் பொறுத்தவரை சமயம், ஆட்சி போன்ற பல்வேறு காரணங்களால் எத்தனையோ மொழிச் சொற்கள் வலியக் கொண்டு வந்து தமிழில் கலக்கச் செய்தபோதிலும் அவை, தண்ணிரில் எண்ணெய் கலந்தாற்போல் ஒட்டியும் ஒட்டாமலும் பட்டும்படாமலும் இருந்து வருகின்றன வலியப் புகுத்த முனைந்த முயற்சி எதுவும் வெற்றி பெறாநிலையில் இன்றும் தமிழ் தனித்து இயங்க வல்ல தனித்தன்மைமிக்க மொழியாக இருந்து வருவதுதான் உலக மொழியியலாளர்களின் நெற்றி களை வெகுவாகச் சுழிக்க வைத்துள்ள நிகழ்வாகும் தமிழில் முதலில் கலந்த பிறமொழிச் சொற்கள் பிராகிருத, பாலி மொழிச் சொற்களாகும் காரணம் இவற்றின் ஒலிப்பு முறை தமிழ் ஒலிப்பு முறையோடு ஒரளவு இணைவாக அமைந்திருப்பதுதான் அதே சமயம் சம்ஸ்கிருதச் சொல் ஒலிப்பு முறை தமிழ் ஒலிப்பு முறைககுச் சற்று மாறுபட்டிருந்ததால் தமிழ்ப் புலவர்கள் இச்சொற்களை எளிதாக எடுத்துப் பயன்படுத்த விழையவில்லை. அப்படியே தவிர்க்கவியலா நிலையில் சம்ஸ்கிருதம் போன்ற பிற மொழிப் பெயர்ச் சொற்கள், இடப் பெயர் போன்றவற்றைக் குறிப்பிட நேரும்போதுகூட, தமிழ் மொழியின் தனித்துவமான ஒலிப்புத் தன்மை கெடா