பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 61

வண்ணம் எப்படி தமிழைக் கையாளுவது என்பதைப் பற்றி,

"வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே”

என ஒலிப்பிலக்கணம் வகுத்தளித்துள்ளது, உலகின் முழுமையான முதல் மொழி இலக்கண நூலான தொல்காப்பியம்

எனினும், பிறமொழிச் சொற்களின் துணையின்றி தமிழால் தனித்து இயங்க இயலும் என்பது மொழியறிஞர்களால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது

தமிழின் தனித்தன்மை

இவ்வாறு, பிறமொழிச் சொற்களின் துணை அறவே இல்லாது தமிழால் தனித்தியங்க இயல்வதற்கு அடித்தளக் காரணம், தமிழில் இடம் பெற்றுள்ள சொற்பெருக்கமேயாகும் வேறு எந்த மொழியிலும் காணமுடியாத அளவுக்கு வேர்ச் சொற் களஞ்சியமாக தமிழ் அமைந்திருக்கிறது என்பதுதான் மொழியியலாளர்களின் ஒருமித்த கருத்து. இச் சிறப்பம்சத்தைக் கடந்த அரை நூற்றாண்டாக கலைச் சொல்லாக்க முயற்சியாளன் என்ற முறையில் பட்டறிவுகளினடிப்படையில் நான் நன்குணர்ந்து வருகிறேன்

இது அறிவியல் ஊழி வாழ்வின் அனைத்தும் படித்தரங்களிலும் அறிவியலின் தாக்கம் நீக்கமற நிறைந்துள்ளதால் அறிவியல், தொழில்நுட்பத் தொடர்புடைய செய்திகளைத் தமிழில் கூற வேண்டிய கட்டாயச் சூழ்நிலை இதற்காக ஏராளமான