பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 செம்மொழி உள்ளும் புறமும்

அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவக் கலைச் சொற்களைத் தமிழில் உருவாக்கித் தீர வேண்டிய கட்டாய நிலை இஃது தமிழில் இயலுமா? என்பது விடைகாண வேண்டிய வினாவாகும்

இதே சூழலில் மற்ற மொழிகளின் நிலை என்ன? இன்று எல்லா மொழிகளுக்கும் கலைச்

சொல்லாக்கம் காண வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஆங்கிலத்தில் ஒரு கலைச் சொல்லை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கான வேர்ச் சொல்லை கிரேக்க மொழியில் இருந்தோ, லத்தீனிலிருந்தோ அல்லது ஹீப்ரு மொழியிலிருந்தோதான் தேடிப் பெறவேண்டும் அதே போன்று ஹிந்தி முதலான ஏதேனுமொரு வட இந்திய மொழிகளில் ஒரு புதிய கலைச் சொல்லை உருவாக்க வேண்டுமெனில் அதற்கான வேர்ச் சொல்லை சம்ஸ்கிருதத்திலிருந்தோ அல்லது பிராகிருதம் மற்றும் பாலி போன்ற பழம்பெருமொழிகளிலிருந்தோதான் தேடிப் பெற வேண்டும் தென்னக மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளில் ஒரு புதிய கலைச் சொல்லை உருவாக்க வேண்டுமெனில் அதற்கான வேர்ச்சொல்லை சம்ஸ்கிருதத்திலோ அல்லது பழந் தமிழிலோ இருக்கிறதா எனத் தேடிப்பெற வேண்டும் ஆனால், அதே சமயத்தில் தமிழில் ஒரு புதிய கலைச் சொல்லை உருவாக்க வேண்டுமெனில், அதற்கான வேர்ச்சொல்லை தமிழிலிருந்து மட்டுமே தேடிப் பெறவியலும் வேறு எந்த மொழி வேர்ச்சொல்லும் தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு அறவே பயன் படாது என்பது மொழியியலார் கருத்தாகும்

அது சரி, நாளும் விரைந்து வளர்ந்து வரும் அறிவியல் துறையின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும்