பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 63

வகையில் தமிழில் பெரும் எண்ணிக்கையில் கலைச் சொற்களை உருவாக்க இயலுமா எனப் பலரும் எண்ணுகின்றனர் இதற்கு மொழியியல் துறையின் தந்தையாகப் போற்றப்படும் டாக்டர் எமினோ அவர்கள், உலகத்து மொழிகளிலேயே மிக அதிகமான வேர்ச் சொற்களையுடைய மொழியாகத் தமிழ் திகழ்கிறது" எனக் கூறியுள்ளதே தக்க பதிலாகும்

இவ்வாறு, தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி யாய் அமைந்துள்ளது என்பதற்குரிய அம்சங்களில் ஒன்றான 'கவிதை மொழித் தாக்கமிலாத் தனித் தன்மை யுடைய மொழியாகத் தமிழ் அமைந்துள்ளது என்பதற்கு இத்தனிச் சிறப்பே தக்க எடுத்துக்

காட்டாகும்

8. Qcod;&lu quanub (LITERARY PRowes)

உலகத்து மொழிகளில் எந்த மொழியில் மிக அதிகமான இலக்கியப் படைப்புகள் உருவாக்கப் பட்டு உள்ளதோ, அந்த மொழி செம்மொழியாகக் கருதப்படுவதற்கு, அதுவொரு அடிப்படைத் தகுதியாகக் கருதப்படும் இந்த அளவுகோலின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உலக மொழிகளில் எதுவெல்லாம் அதிக அளவில் இலக்கிய வளமிகு படைப்புகளைப் பெற்றுள்ளதென்பதைக் கணக்கிட்டறியலாம் இதற்கு லத்தீன், கிரீக், ஹீப்ரு போன்ற மொழிகள் உச்சச் செழிப்போடு இருந்த காலக்கட்டத்தையே கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் அந்தக் கால கட்டம் தமிழைப் பொருத்தவரை சங்க காலமாகவும் சமஸ்கிருதத்தைப் பொருத்தவரை வேதகாலமாகவும் அமைந்துள்ளதைக் காணலாம்