பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 செம்மொழி - உள்ளும் புறமும்

சங்க கால இலக்கியப் படைப்புகளின் செழுமையை மிகச்சிறப்பாகப் பிறமொழி இலக்கியங்க ளோடு ஒப்பீட்டடிப்படையில் ஆய்ந்தவர்கள் செக் நாட்டு மொழியியல் அறிஞரும் ஆழ்ந்த தமிழ்ப் புலமையாளருமான கமில் சுவலபில் என்பவராவார் இவர் சங்க இலக்கியங்களை சிறப்பாக ஆய்ந்து, அவை 26,350 வரிகளில் அமைந்திருப்பதாகக் கணக்கிட் டுள்ளார் இதே காலககட்டத்தில் லத்தீன், ஹீபரு, கிரேக்க மொழிகளிலோ அல்லது சீன, சம்ஸ்கிருத மொழிகளிலோ இந்த அளவு எணணிககையில் இலக்கியப் படைப்புகள் இயற்றப்படவில்லை என்பது அவர்தம் ஆய்வு முடிவாகும்

எண்ணிக்கையில் மட்டுமல்ல, இலக்கியத் தரத்திலும் மிக உயர்ந்த நிலையை சங்க இலக்கியங்கள் பெறுவதாகக் கூறுகிறார் அதோடு, ஒட்டு மொத்த மனிதகுல மேன்மையை மையமாகக் கொண்டு எழுந்த இலக்கியப் படைப்புகள் அவை என்பது அவர் கருத்து அக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் பலவும் அரச குலச் சார் புடைய மேன்மக்களைப் பற்றிப் பேசும்போது, சங்க இலக்கியங்கள் சாதாரண குடிமக்களின் சமுதாய வாழ்க்கை பற்றி அலசி ஆராயும் வகைகளில் இலக்கியப் படைப்புகள் உருவான விந்தையைப் போற்றி மகிழ்கிறார் இன்னும் சொல்லப் போனால் சாதாரண குடிமகன், குடிமகளான கோவலன்கண்ணகி வாழ்வைச் சித்தரிக்கும் உலகின் முதல் குடிமக்கள் காப்பியமாக சிலப்பதிகாரம் அமைந்த அதேசமயம், அதே குடும்பத் தொடர்புடைய இலக்கியப் படைப்பாக, மாதவியின் மகள் மணிமேகலையைக் காப்பியத் தலைவியாகக்