பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 செம்மொழி - உள்ளும் புறமும்

10. கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு

- பங்களிப்பு

தமிழ் செம்மொழி' என்பதற்கான தகுதிப் பாடுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று 'கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு - பங்களிப்பு என்பதாகும் இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் தமிழ் இலக்கியங்களில் உண்டென்றாலும் ஒன்றை மட்டும் இங்குச் சுட்டிக்காட்டலாம் எனக் கருதுகிறேன்

உலகப் பெருமொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் உள்ளன. அவை புதினம், சிறுகதை, நாடகம், திறனாய்வு எனப் பல்வேறு வகையினவாகவும் உள்ளன தமிழிலும் அவ்வாறே பலவகை இலக்கிய வடிவங்கள் உள்ளன

ஆனால், மொழிகளில் பல வகைகள் இருப்பதாகத் தெரியவில்லை அதிகமாகப் போனால் ஒவ்வொரு மொழியையும் எழுத்து வழக்குமொழி, பேச்சு வழக்குமொழி என இருவகையினவாகப் பிரிப்பர் இஃது எல்லாமொழிகளுககும் உண்டான அடிப்படைப் பொதுத் தன்மையாகும்

ஆனால், உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒரு தனித்தன்மை தமிழுக்கு மட்டுமே வாய்க்கப்பெற்றதாக உள்ளது அதுதான் 'முத்தமிழ்' என்ற தனிப்பெரும் சிறப்பு

உலகிலுள்ள மொழிகள் அனைத்தையும் ஒரு மொழி என்ற அளவில் மட்டுமே அணுகுகின்றனர், ஆய்கின்றனர் ஒரு மொழியின் இலக்கிய வடிவங்களைப் பல்வேறு வகையினவாகக் காண்பது உலகியல் நடைமுறை ஆனால் தமிழ் மொழியை மட்டும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என