பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 செம்மொழி உள்ளும் புறமும்

இதுவும் தமிழ் செம்மொழி என்பதற்கு எல்லா வகையிலும் அசைக்க முடியாத ஆதாரமாக அமைந்துள்ளதெனலாம்

சம்ஸ்கிருதம் செம்மொழியானது எப்படி?

செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள் பதினொன்றும் தமிழுக்கு முழுமையாகப் பொருந்தி வருகின்றன அதே சமயத்தில் 'செம்மொழி'யாக அறிவிக்கப் பட்டுள்ள சம்ஸ்கிருத மொழிக்கு இத்தகுதிப் பாடுகளில் ஏழு மட்டுமே பொருந்துவன என்பது மொழியியல் ஆய்வாளர்களின் கருத்தாகும் அவ்வா றெனில், சம்ஸ்கிருதம் எப்படி செம்மொழித் தகுதிப் பாட்டைப் பெற முடிந்தது எனப் பலரும் வினாத் தொடுக்கவே செய்கின்றனர் இதற்கான காரணத்தை தெளிவாக அறிய வேண்டுமெனில் நம் பார்வையைச் சற்றுப் பின்னோக்கிச் செலுத்த வேண்டும்

வணிகத்திற்காக இங்குவந்து காலூன்றத் தொடங்கிய ஆங்கிலேயர், நாளடைவில் ஆட்சிக் கட்டில் ஏறி அரசோச்சுபவர்களாக மாறினர் தாங்கள் ஆட்சி செய்யமுனைந்த கிழக்கத்தியப் பகுதி களின் மொழி, கலை, பண்பாடு போன்றவற்றைக் கவனிப்பதற்காக ஏசியாட்டிக் சொசைட்டி (Asiatic Society) என்ற அமைப்பு அன்றைய ஆட்சியின் அடித் தளமாக விளங்கிய சென்னையில் தொடங்கப் பட்டது ஆட்சி விரிவாகி அழுத்தம் பெற்றபோது ஆங்கில ஆட்சிக்கான தலைநகராகக் கல்கத்தா அறிவிக்கப்பட்டவுடன் ஏசியாட்டிக் சொசைட்டி' அமைப்பும் கல்கத்தாவுக்குச் சென்றுவிட்டது

சென்னையில் இச்சொசைட்டி இருந்தபோது தமிழுக்கு முதன்மை நிலை இருந்தது இவ்வமைப்பு