பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 செம்மொழி உள்ளும் புறமும்

படித்ததோடு மொழி மாற்றம் செய்ததையும் தடுக்கவில்லை காரணம், ஜெர்மானியர்களும் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களே என்று கருதியதுதான்

ஜெர்மன் மொழி வாயிலாக ஐரோப்பிய மொழிகளில்

மாக்ஸ்முல்லரைத் தொடர்ந்து கெதெ போன்ற புகழ்பெற்ற ஜெர்மானிய இலக்கிய வாணர்கள் சம்ஸ்கிருத மொழியிலுள்ள புகழ் பெற்ற படைப்பு களை, காளிதாசனின் சாகுந்தலம் போன்ற படைப்புக ளெல்லாம் ஜெர்மானிய மொழியில் பெயர்க்கப்பட, அவைகளெல்லாம் பின்னர், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப் படலாயின இதன் மூலம் சம்ஸ்கிருத மொழியும் சம்ஸ்கிருதப் படைப்புகளும் ஐரோப்பாவெங்கும் பரவலாயின பின்னர் அவை உலகெங்கும் மொழி பெயர்க்கப் பட்டுப் பரவலாயின

இந்தியாவில் அச்சுவாகனமேறிய முதல் நூல் 'தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் நூலாக இருந்த போதிலும், தமிழ்ப் படைப்புகளை பற்றி வெளியுலகம் அறிந்து கொள்ள வாய்ப்பேதும் ஏற்படவில்லை என்றே கூறவேண்டும் சமயப் பணி காரணமாகத் தமிழகம் வந்த பெஸ்கி போன்ற பாதிரிமார்கள் 'வீரமாமுனிவர் என்று தமிழ்ப் பெயர் சூடி, தமிழ்ப் பணி ஆற்றியபோதிலும் ஜெர்மானியர்கள் சம்ஸ்கிருதத்தையும் அதன் படைப்புகளையும் உலகுக்கு அறிமுகப்படுத்தியதுபோல் வேறு யாரும் தமிழையும் தமிழ்ப் படைப்புகளையும் தெரியப்படுத்த முனையவில்லை என்றே கூறலாம் சம்ஸ்கிருத மொழியும் இதன் படைப்புகளும் வெளியுலகெங்கும்