பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 செம்மொழி உள்ளும் புறமும்

பேராசிரியர் என்ற முறையில் இத்துறையின் தலைவராக இருக்கிறேன் எனக்குத் தமிழும் தெரியும் என்பதால் தமிழ்ப் பேராசிரியனாகவும் இருந்து வருகிறேன் தமிழுக்கென்று தனித் துறைகள் ஏதும் இங்கு இல்லை" என்றார் இங்கு மட்டும்தான் இந்நிலையா? அல்லது உலகப் பல்கலைக்கழங்கள் பலவற்றிலும் இதே நிலைமை தானா? என்று வினாத் தொடுத்தபோது,

"தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள், பூரீலங்கா, சிங்கப்பூர், மலேசியப் பல்கலைக்கழகங்கள் தவிர்த்து, புதுதில்லிப் பல்கலைக் கழகம் உட்பட உலகின் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இங்குள்ள நிலைதான் எல்லா இடங் களிலும் தமிழுக்கு ஒட்டுக் குடித்தன வாய்ப்பு மட்டுமே உள்ளது தனிக் குடித்தனம் இல்லை" என்று சிரித்துக் கொண்டே கூறினார்

"ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும்

சம்ஸ்கிருதம்போல் தமிழும் தனிக்

குடித்தனம் நடத்த என்ன தான் வழி?" எனக் கேட்டபோது சற்றும் தயங்காமல்,

"ஒரே வழி, சம்ஸ்கிருதம்போல் தமிழையும் செம்மொழி ஆக்குவதுதான் தமிழைச் செம்மொழியாக இந்திய அரசு ஏற்றால் பல்கலைக் கழக மானியக் குழு அதனை உடனடியாக ஏற்கும் அதனால் இந்தியப் பல்கலைக் கழகங்கள் மட்டுமல்ல, உலகப்