பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 79

பல்கலைக் கழகங்கள் அனைத்துமே செம்மொழியாக ஏற்கும் பின், எங்கும் தனிக்குடித்தனம் செய்வது தமிழுக்கு எளிதாகி விடும்"

எனக் கூறி மீண்டும் சிரித்தார்

செம்மொழி ஆய்வும் வழிமுறை காணலும்

அன்றிலிருந்து என் மனம் தமிழ் செம்மொழி ஆவதைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கியது இதற்கான செம்மொழிகளின் வரலாற்றை ஆய்ந்தேன் மொழியியல் வல்லுநர்களுடன் கலந்துரையாடினேன் பின், தமிழ் செம்மொழி ஆவதற்கான அடிப்படைத் தகுதிப்பாடுகள் எவையெவை என்பதில் கருத்தைச் செலுத்தி ஆய்வு நடத்தினேன் அவற்றையெல்லாம் தொகுத்து, வகுத்து முறைப்படுத்தினேன் அத்தகுதிப் பாடுகள் தமிழுக்கு எவ்வாறு பொருந்துவனவாய் உள்ளன என்பதையெல்லாம் ஒப்பீடு செய்து ஆய்ந்தேன் மற்ற செம்மொழிகளுக்கு எந்த அளவு இத் தகுதிப்பாடுகள் பொருந்துகின்றன என்பதையும் ஒப்பீட்டடிப்படையில் ஆய்ந்தேன் போதிய தகுதிப் பாடுகள் இல்லாத நிலையிலும் இவை செம்மொழி களாக அங்கீகரிக்கப்பட வேறு அழுத்தமான மறைமுகக் காரணங்கள் யாவை என்பதிலும் ஆழ்ந்த கவனம் செலுத்தினேன் அனைத்துத் தகுதிகளும் ஒருங்கே அமையப் பெற்றிருந்தும் தமிழ் செம்மொழி ஆகாததற்கு அக-புற காரணங்கள் எவையெவை என்பதிலும் ஆழ்ந்து கருத்துன்றி ஆய்வு செய்தேன் இந்த ஆய்வுகளின் அடிப்படையில் இப்பிரச்சினையை முதன்மைப்படுத்த ஒருசில வழிமுறைகளைப் பின்பற்றி என்னளவில் செயல்படலானேன்