பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 செம்மொழி - உள்ளும் புறமும்

ஈடுபட்டேன் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள் என்னென்ன என்பதை ஆராய்வதில் மீண்டும் பெருங்கவனம் செலுத்தினேன் செம்மொழி அங்கீகாரம் கிடைப்பதால் தமிழ் பெறக்கூடிய பயன்கள் என்ன என்பதையெல்லாம் பட்டியலிட்டேன் பிறகு 1982ஆம் ஆண்டில் செம்மொழி கோரிக்கை மனுவை அரசின் பரிசீலனைக்கு அனுப்பினேன் 1983ஆம் ஆண்டு வரை காத்திருந்தேன் பதிலோ நடவடிக்கையோ ஏதும் எடுப்பதாகத் தெரியவில்லை மீண்டும் ஒரு நினைவூட்டுக் கடிதம் எழுதினேன் இதுவும் கிணத்தில் போடப்பட்ட கல்லானது 1984இல் 'கலைமாமணி விருதளிதததற்கு நன்றி கூறும் முறையில் முதல்வருக்கு எழுதியதோடு செம்மொழி நினைவூட்டுக் கடிதத்தையும் இணைத்து அனுப்பினேன் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள அன்றைய தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார் செயலாளர் அக்கோரிக்கை மீது எழுதிய குறிப்பில் திரு மணவை முஸ்தபா கூறுவதுபோல் தமிழைச் செம்மொழி ஆக்கினால், தமிழைச் செத்த மொழிகளின் பட்டியலில் சேர்தததாகிவிடும் எனவே, இக்கோப்பு இத்துடன் முடித்துவைக்கப்படுகிறது. என்ற முறையில் குறிப்பு எழுதி கோப்பையே முடிதது வைத்து விட்டார் இது எதுவும் எனக்குத் தெரியாது 2000ஆம் ஆண்டில் புதுதில்லியில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் அன்றைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், தொடர்புடைய கோப்பைக் கையில் வைததுக் கொண்டு பேசியபோது அவையோருக்கு இவ்வுண்மையை உணர்த்தியபோது தான் எனக்கும் அவையோருக்கும் தெரிய வந்தது அண்ணா பல்கலைக்கழகம் 1988இல் வளர்தமிழ்