பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 செம்மொழி உள்ளும் புறமும்

அழைத்துப் பேசினார் என் ஆலோசனைக்கொப்ப என்னோடு டாக்டர் வாசெ குழந்தைசாமி, டாக்டர் அகத்தியலிங்கம், டாக்டர் பொற்கோ, டாக்டர் ஜான் சாமுவேல் ஆகியோரைக் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, செம்மொழி கோரிக்கை மனு மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு முறைப்படி அனுப்பப்பட்டது பிரதமர் மாநாட்டைத் தொடங்கி வைத்த போதிலும் செம்மொழி அறிவிப்பு எதையும் செய்யாமல் சென்றுவிட்டது பெரும் ஏமாற்றமாகி விட்டது

செயலுக்கு வந்த செம்மொழிக் கோரிக்கை மீண்டும் முடக்கம்

1996இல் மீண்டும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் வழக்கமான செம்மொழி கோரிக்கையை அவருக்கு அனுப்பினேன் அதன்மீது அவர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அம் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அன்றைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரைப் பணித்தார் அமைச்சரை இது தொடர்பாகச் சந்தித்து விரிவாக விளக்கினேன் அவர், என்னுடன் டாக்டர் வா செ குழந்தைசாமி, டாக்டர் ஜான் சாமுவேல், டாக்டர் பொற்கோ முதலானவர்களை கொண்ட குழு அமைத்து, அறிக்கை தயாரிக்க, அதனை முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் மத்திய அரசின் கல்வித துறைக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு, தமிழைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார் பின் மத்திய அரசின் கல்வித் துறை இக்கோரிக்கை