பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 87

சங்கம் புதுதில்லியில் நடத்திய செம்மொழி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, தமிழ் செம்மொழியாவதன் அவசியத்தையும் அனைத்துத் தகுதிப்பாடுகள் இருந்தும் அரசு அக்கரையில்லாமல் இருப்பதையும் அதற்கான என் முயற்சிகள் கால் நூற்றாண்டாகத் தொடர்ந்து கொண்டு இருப்பதையும் விவரித்துப் பேசியதோடு வானொலி போன்ற ஊடகங்கள் மூலமும் வேண்டுகோள் விடுத்தேன்

இம் முயற்சியைத் தொடர்ந்து தலைநகர் தமிழ்ச் சங்கத்தார், பெங்களுர் தமிழ்ச்சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கங்களின் உறுதுணையோடு அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் செம்மொழி மாநாடுகளைச் செவ்வனே நடத்தினர்

இந்திய மொழியியலார் மாநாட்டில் டாக்டர் கலைஞர் பேருரை

இறுதியாக, 2002இல் தமிழ் அக்காதெமியின் சார்பில் சென்னையில் இந்திய மொழி அறிஞர்களின் மாநாடு நடக்க ஏற்பாடாகியது அம் மாநாட்டை தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் தொடங்கிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது அன்றைய பாண்டிச்சேரி ஆளுநர் வாழ்த்துரை வழங்க ஏற்பாடாகியது

இந்திய மொழியிலாளர்கள் பெருமளவில் பங்கேற்கும் இம்மாநாட்டில் தமிழ் செம்மொழி கோரிக்கை முக்கிய இடம் பெறவேண்டும் என்பது என்னுடைய நாட்டம் மட்டுமல்ல, தமிழ் அக்காதெமியின் தலைவர்களின் குறிப்பாக மூத்த வழக்கறிஞர் திரு காந்தி, செயலாளர் திரு த சிக