பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 செம்மொழி - உள்ளும் புறமும்

கண்ணன், திருமதி மணிமேகலைக் கண்ணன் ஆகியோரின் விருப்பமாகவும் இருந்தது

இதற்காக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்ளை இம்மூவரோடு நேரில் கண்டு, இப்பிரச்சினையை மாநாட்டில் வலியுறுத்துமாறும் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகளைப் பற்றிய விரிவான குறிப்புரைகளையும் வழங்கிவிட்டு வந்தேன் இந்திய மொழியியலாளர்களின் மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையில் டாக்டர் கலைஞர் அவர்கள் அனைத்து மொழியியல் வல்லுநர் களும் ஏற்று, போற்றும் வகையில் அற்புதமாக அவருக்கேயுரிய முறையில் செம்மொழிக் கோரிக்கையை விளக்கிப் பேசினார் வாழ்த்துரை வழங்கிய பாண்டிச்சேரி ஆளுநர் அவர்கள், அனைத்துத் தகுதிப்பாடுகளும் உள்ள தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற தன்னால் இயன்ற வழிகளிலெல்லாம் முயலப்போவதாகவும் கூறினார் அன்று டாக்டர் கலைஞர் பேச்சை பாராட்டாத மொழியியல் அறிஞர்களே இல்லை எனலாம் என்றாலும், மத்தியில் ஏதும் நடவடிக்கை இல்லை, பரிசீலிக்கிறோம் என்ற வழக்கமான பதிலைத் தவிர

நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சி

அதன் பின், இப்பிரசசினையை பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நேரடிப் பார்வைககுக் கொண்டு செல்லும் வகையில் 'செம்மொழி கோரிக்கை மனு'வில் நாடாளுமன்ற திமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனு அளிக்க முத்தமிழறிஞர் டாகடர் கலைஞர் அவர்கள் ஏற்பாடு செய்ய, அவ்வாறே பிரதமருக்கு மனு