பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 செம்மொழி உள்ளும் புறமும்

அளவிலான மாபெரும் தேசியக் கட்சிகளின் தமிழகக் கிளைகளும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ் செம்மொழிப் பிரச்சினையைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் ஒரு முக்கியக் கோரிக்கையாக வைத்து மக்களிடம் வாக்குச் கேட்க முனைந்திருப்பதுதான் அதில் குறிப்பிடத்தக்க வேடிக்கை என்னவென்றால், இப்போதும் ஆட்சியில் இருக்கும் பா ஜா க நினைத்திருந்தால் எப்போதோ தமிழை செம்மொழி யாக அறிவித்திருக்க முடியும் ஆளும் கூட்டணிக் கட்சிகளெல்லாம் கோரிக்கைவிடுத்தும் நாடாளு மன்றத்தில் பேசியும் மசியவில்லை அக்கட்சியின் தமிழகக் கிளை கோரிக்கைவிடுத்தும் செவிசாய்க்க வில்லை ஆனால், நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி அவர்கள் விடுக்கும் வேண்டுகோள், தாங்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தமிழைச் செம்மொழியாக அறிவிப்போம் என்பதுதான் இப்பேச்சும் வாககுறுதியும் நம் நாட்டுப் புறங்களில் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானமேறி நிலவைப் பிடித்து வந்தானாம் என்று கூறும் பழமொழியைப் போல் உள்ளது இதெல்லாம் வெறும் ஏமாற்று என்பது மக்களுக்குத் தெரியாதா என்ன?

தமிழ் செம்மொழி ஆவதால் ஏற்படும் நன்மை

தான் என்ன?

அதுசரி, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது என்பதைப் பற்றி பேசும் முன், தமிழ் செம்மொழி ஆவதால் அப்படி என்ன பெரிய நன்மை, பயன் தமிழுக்கு ஏற்பட்டு விடப்போகிறது? என்ற சாதாரண மக்களின் கேள்விக்குப் பதில் காண்போம்