பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 91

ஒட்டுக்குடித்தனம் போய் தனிக் குடித்தனம்

இப்போது செம்மொழிகளாக இந்திய அரசு ஏற்றுள்ள சம்ஸ்கிருதம், பாரசீக, அரபி மொழிகளைப் போல் தமிழையும் செம்மொழியாக ஏற்று செம்மொழிப் பட்டியலில் இணைத்தால், இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழு உடனடியாக ஏற்கும் இவ்வாறு ஏற்றால் இந்தியாவில் மொழிப்பாடமுள்ள ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் தமிழுக்கென்று ஒரு தனித்துறை அமைய வாய்ப்பேற்படும்

இந்திய அரசும் பல்கலைக்கழக மானியக் குழுவும் தமிழைச் செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் தமிழைச் செம்மொழியாக ஏற்கும் தற்போது சம்ஸ்கிருதத் துறைகள் எங்கெங்கெல்லாம் உண்டோ அப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்கென்று தனித்துறைகள் உருவாகும் தற்போது கீழ்த்திசை நாடுகளின் Quon go officit & gopu?cir (Department of Oriental Languages) ஒரு மொழியாக ஒட்டுக் குடித்தனம் நடத்திவரும் தமிழ்மொழி, தனித்துறையாக தனிக்குடித்தனம் நடத்தும் நிலை உருவாகும் இதன்மூலம் அதிகமானோர் தமிழ் பயிலவும் தமிழில் ஆய்வுகள் செய்யவும் அரிய வாய்ப்பு உருவாகும்

இங்குக் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சம் தற்போது உலகில் 57 நாடுகளில் தமிழர்கள், குறிப்பாக ஈழத் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். இவர்கள் தங்கள் தாய்மொழியைப் பல்கலைக்கழக அளவில் படிக்கவும் ஆய்வுகள் செய்யவும் பெரிதும் விரும்புகின்றனர். அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைகள்