பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 செம்மொழி உள்ளும் புறமும்

உருவானால் இவர்களின் ஏக்கமும் நீங்கும்; தமிழ்க் கல்வியும் ஆய்வும் சிறப்புறும் என்பது திண்ணம்

'தமிழ் ஆண்டு தரும் தனிப்பெரும் பயன்கள்

தற்போது மத்திய அரசு, சம்ஸ்கிருதம் செம்மொழி என்பதற்காக சம்ஸ்கிருத ஆண்டு' அறிவித்து சிறப்பாகக் கொண்டாடியதுபோல், தமிழ் செம்மொழியானால் மத்திய அரசு தமிழ் ஆண்டு கொண்டாடும் வாய்ப்பு உருவாகும் தமிழ்நாட்டைச் சிறப்பிக்கும் வகையில் சம்ஸ்கிருத மொழியின் பன்முக வளர்ச்சிக்கு 100 கோடிக்கு மேற்பட்ட தொகையை ஒதுக்கிச் செலவிட்டதுபோல் தமிழ் வளர்ச்சிக்கான பன்முகத் திட்டங்களைத் தீட்டி மிகச் சிறப்பாக நிறைவேற்ற முனையும் தமிழ் ஆண்டை தமிழ்நாடு, இந்தியா மட்டும் கொண்டாடுவதோடு அமையாது, எந்தெந்த நாட்டுப் பல்கலைக் கழகங்கள் தமிழ்த்துறைகளை உருவாக்கியுள்ளனவோ அவை யெல்லாம் கொண்டாடும் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ் ஆண்டு சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படும் இதற்காக ஆங்காங்குள்ள தமிழர் அமைப்புகளும் பல்கலைக் கழகங்களும் அந்தந்த நாடுகளின் அரசுகள் சிறுபான்மைத் தமிழர் மொழி தமிழ் என்பதால் நிதி ஒதுக்கிக் கொண்டாட உதவும் இதன் மூலம் தமிழ், தமிழ்க் கலை, தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கியம் போன்றவற்றின் சிறப்பும் பெருமையும் ஆய்வு பூர்வமாக நிறுவப்படும் அது தமிழ் இனத்தின் மீது பொழியப்படும் புகழ் பூக்களாக அமையும்