பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 செம்மொழி - உள்ளும புறமும்

அகராதிகள் பல தொகுதிகளாக உருவாக்கப்படலா

மல்லவா?

சம்ஸ்கிருத அளவுகோலுக்குப் பதிலாகத் தமிழ் அளவுகோல்

அச்சகங்கள் உருவாகும்வரை தமிழ் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு வந்தன. இம்முறை சங்க காலத்துக்கு முன்பிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும் அன்றையத் தமிழ்ப் படைப்புகள் அனைத்தும் ஒலைச் சுவடிகளிலேயே அடக்கமாகி யிருந்ததைப்போல் ஆட்சி, சமயம் மற்றும் தமிழ்ச் சமுதாயத் தொடர்பான செய்திகளைக் கொண்ட கல்வெட்டுகள், சாசனங்களாக உருவாக்கப் பட்டிருந்தன. இக்கல்வெட்டுகளில் பெரும்பாலானவை கோயில் மதிற்கவர்களிலும் கோட்டை கொத்தளங் களிலும் பதிக்கப்பட்டிருந்தன. அதேபோல் செப்புப் பட்டயங்களும் பொறிக்கப்பட்டன. இவற்றைப் பற்றிய ஆய்வுகள் தொல்பொருள் ஆய்வாளர்களாலும் கல்வெட்டு ஆய்வறிஞர்களாலும் ஒலைச் சுவடிகளில் புலமைமிக்க ஆய்வறிஞர்களாலும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன

இத்தகைய கல்வெட்டு மற்றும் ஒலைச்சுவடி ஆய்வுகளுக்கு அளவுகோளாக சம்ஸ்கிருத மொழியே இருந்து வருகிறது காரணம், சம்ஸ்கிருதம் செம்மொழியாக இருந்து வருவதுதான் இது தவிர்க்க முடியாததாகவும் தொல்பொருளாய்வாளர்களால் கருதப்படுகிறது. இதனால், பிராமி எழுத்து முறைகளின் சாயலில் தமிழ் எழுத்துக்கள் கணிக்கப் பட நேர்வதால் வடமொழி உறவுடன் தமிழ் வளர்ந்ததாகக் கணிக்கப்பட வேண்டிய கட்டாயச்