பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 85

சூழல் உருவாவதும் தவிர்க்க முடியாததாகிறது இதனால், உண்மை நிலைமை அறிந்துணரவியலா நிலை தமிழறிஞர்கட்கும் ஆய்வாளர்கட்கும் ஏற்படுகிறது

தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற்றால், செம்மொழி என்ற முறையில் தமிழையே அளவு கோலாகக் கொண்டு தமிழ் ஒலைச் சுவடிகளும் கல்வெட்டுகளும் ஆராயப்பட்டால் மிகச் சரியான தகவல்கள் கிடைக்க வழியேற்படுமல்லவா

மேலை மற்றும் கீழை மொழிகளில் தமிழ்ப் படைப்புகள்

சம்ஸ்கிருதம் 'செம்மொழி என்பதனால், அதிலுள்ள படைப்புகள் பல கீழை, மேலைய நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன இன்றும் பெயர்க்கப்பட்டு வருகின்றன. இதே நோக்கில் தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற்றால் உலக மொழியியலாளர்களின் - இலக்கியவாணர்கள் - ஆய்வறிஞர்களின் கவனம் தமிழின்பால் திரும்பும் தமிழில் உள்ள உயர்ந்த படைப்புகளை, செவ்விலக் கியங்களை தத்தமது மொழிகளில் பெயர்க்க முனைவர் இதன் மூலம் தமிழ் படைப்புகள், பழைய, புதிய இலக்கியங்கள் கீழை நாட்டு மொழிகளிலும் மேலைநாட்டு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படும். இதன் மூலம் தமிழ் மொழியின் சிறப்பும் இலக்கியப் படைப்புகளின் உயர்வும் எழுத்துப் பூர்வமாக உலகளாவிய முறையில் நிறுவப்படும் இதனால், தமிழ் படைப்புகளுக்கு ஒரு உலகளாவிய ஆய்வுப் பார்வை கிடைக்க வாய்ப்பேற்படும்