பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 செம்மொழி - உள்ளும் புறமும்

உலகப் பெரும் கலைக்களஞ்சியங்களில் தமிழுக்கு சிறப்பிடம்

உலகளாவிய முறையில் வெளியாரும் ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா போன்ற கலைக் களஞ்சியங்களில் சம்ஸ்கிருதம், கிரீக், லத்தீன் போன்ற மொழிகளைப் பற்றியும் அம்மொழி களிலுள்ள படைப்புகள், படைப்புசார்ந்த இலக்கியத் தகவல்களும் பெருமளவில் இடம்பெற வாய்ப்பேற் பட்டுள்ளது அதே சமயம் இரண்டாயிரம் ஆண்டு கட்கு மேற்பட்ட பழமையுடைய மொழியாயினும் தமிழ் பற்றி தகவல்கள் மிகக் குறைவாகவே இடம் பெற நேர்கிறது இதற்கு அடிப்படைக் காரணம் சம்ஸ்கிருதம் 'செம்மொழி எனும் சிறப்பைப் பெற்றிருப்பதேயாகும் இதே செம்மொழித் தகுதிப்பாட்டைத் தமிழும் பெற்றிருந்தால் தமிழ்த் தொடர்பான பல்வேறு செய்திகள் இத்தகைய கலைக் களஞ்சியங்களில் அதிக அளவில் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகிவிடும் எனக் கூற வேண்டியதில்லை

உலகப் புகழ்பெற்ற கலைக்களஞ்சியங்களில் தமிழ் தொடர்பான பல்வேறு செய்திகள் வெளி வருவதைப் படிக்கும் வாசகர்கள், மேற்கொண்டு செய்திகளை அறியவும் ஆராய்ச்சி செய்யவும் வாய்ப்பேற்படும் இதனால், மேலும் மேலும் தமிழ் பற்றியும் தமிழர் வாழ்வு பற்றியும் பல அரிய செய்திகள் உரிய முறையில் உலகுக்குக் கிடைக்கப் பெரு வாய்ப்புக் கிடைக்கவியலும்

ஒப்பீட்டாய்வு மூலம் தமிழ் சிறப்பு நிலைபெற

ஒரு மொழி செம்மொழி என அறிவிக்கப் பட்டால், அம்மொழி ஆய்வாளர்கள் மற்றும்